Saturday, June 2, 2012

2 மாதத்தில் சிகரெட்டை விட...


2 மாதத்தில் சிகரெட்டை விட ...

(என்னுடைய அனுபவத்துல சொல்றேன் -நான் 7 வருடங்களுக்கு மேலாக குடித்த நான் இந்த கருமத்தை விட்டு தற்போது இரண்டு வருடங்களை தாண்டியாகிவிட்டது ...

இப்போது அந்த வாடை எனக்கு நுகரும் போது குடலை பிரட்டி வாந்தி வருவது போல உணருகிறேன்.

இப்படி தானே நான் குடிக்கும் போது அருகில் இருப்பவர்களுக்கு இருந்திருக்கும்,அதை நினைக்கும் போது என்னை நினைத்து இப்போதும் வேட்கபடுகிறேன்

இது அட்வைஸ் இல்லங்க இப்படியும் முயற்சி செய்து பார்க்கலாம்னு சொல்றேன் ..ஏன்னா நான் இந்த கருமத்த குடிக்கும் போது யார் அட்வைஸ் சொன்னாலும் கோவம் தான் வந்தது ...)

வழக்கமாக பழகும் நண்பர்களை ஒரு சில மாதங்களுக்கு தள்ளி வையுங்கள் ...
புது புது நண்பர்களுடன் பழகுங்கள் ...அப்போது தான் அவர்கள் முன் சிகரட் குடிக்க தயக்கம் வரும்,தவறாக எடுத்துகொள்வார்கள் என்று ...

சும்மா இருக்கும் நேரங்களில் கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் கோவிலுக்கு சென்று நேரத்தை கழிங்கள் ,ஏனென்றால் அங்கு சிகரட் குடிக்க வாய்ப்பிருக்காது ... முடிந்தால் நூலகங்களுக்கு செல்லுங்கள் ....

தொலைதூர பயணம் மேற்கொள்ளும் பொது இடை நில்லா பேருந்தாக பார்த்து ஏறுங்கள் ...

பாக்கெட்டில் சில்லறை பணம் வைப்பதை தவிருங்கள் ...

சிகரட் குடிக்க தோன்றும் போது தம்முடைய பெற்றோரையும் மணமாகி இருந்தால் தன்னுடைய மனைவியையும் பிள்ளைகளில் எதிர்காலத்தை நினைத்துகொள்ளுங்கள்

தனிமையில் இருப்பதை தவிருங்கள்...

சிகரட் குடிக்க வேண்டும் என்று தோன்றும்போது வானத்தை நோக்கி தலையை அண்ணாந்து காரி உமிழுங்கள் ...ஏனென்றால் உங்கள் முகத்தின் மீதே அந்த உமிழ் நீர் அசிங்கபடுத்தும்...மறுமுறை துப்ப தோணாது ...

30 கட்டம் போட்டு ஒரு அட்டையை எப்போதும் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளுங்கள் , ஒருவொரு நாளும் சிகரட் குடிக்காமல் இருக்கும் போது அந்த அட்டையில் டிக் செய்து கொள்ளுங்கள்...அது உங்களின் முயற்சியை ஊக்கபடுத்தும் ...

முக்கியமாக உங்களை நீங்களே பாராட்ட பழகி கொள்ளுங்கள் ....

கீழே உள்ள படத்தை 2 மாதமாவது பாகேட்டி வைத்துக்கொள்ளுங்கள் .

இப்படியே கஷ்டப்பட்டு ஓரிரு மாதங்கள் கடைபிடியுங்கள் ...பிறகு பாருங்கள் அந்த கேட்ட பழக்கம் உங்களை நெருங்கவே பயப்படும் ...உங்கள் மீது மற்றவர்கள் கொண்டுள்ள மரியாதையை நினைத்து நீங்களே அசந்து போவீர்கள் ...

(இதில் ஒரு நாள் தவறவிட்டாலும் வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறிகொள்ளும் )
வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது . உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!! ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.


1 comments:

SELECTED ME said...

உடனடியாய் நிறுத்துவதை விட எண்ணிக்கைகளைக் குறைத்து மெதுவாய் நிறுத்துவது சிறப்பு.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls