Monday, October 24, 2016

கனவில் தொடங்கிய கார்காவயல் சித்தர் - பயணம்

அட நான் சந்தர்ப்பவாத நாத்திகன்னு ஊருக்கே தெரியும்
 
படிக்கும் காலத்துல வாத்தியார்கிட்ட உதை வாங்ககூடாதுன்னே போறவழில உள்ள கோயில்ல வேண்டிகினு தைரியாமா போவது வழக்கம். படிச்சிட்டு போனவனுக்கு வேண்டிப்பான் என்னையை போல படிக்காத மண்டும் வேண்டிப்போம். இங்க என்ன ஹை லைட்டுனா என்னைக்கெல்லாம் உதைவாங்ககூடாதுன்னு வேண்டிக்கிறமோ அன்னைக்கு தான் செமத்தியா வாங்குவோம். படிக்காம போனா வாத்தியார்கிட்ட இருந்து கடவுளாலையும் காப்பாத்த முடியாதுன்றது உங்களுக்கே தெரியும் 

உண்மையிலேயே கடவுளுக்கு சக்தியிருந்தா என்னைய வாத்தியார்கிட்ட இருந்து காப்பாத்திருக்கும்ல அன்னைக்கு முடிவுபண்ணினேன் கடவுளை நம்புறது வேஸ்ட் அவருக்கு சக்தியில்லைன்னு. வெறும் கல்ல கும்பிடற கூமுட்டையா இருக்கோம்னு. இப்போ சொல்லுங்க அது சிறுபிள்ளைத்தனம் தான

நாளைடைவில் கடவுள் நம்பிக்கை இருக்கு  இல்லை என்பது விடுத்து அதனை பற்றி சிந்திதிப்பதையே நிறுத்திவிட்டேன். ஆனால் என்றுமே எவர் நம்பிக்கையையும் கேலி செய்வதோ கிண்டல் செய்வதோ இன்றளவும் கிடையாது. ஆனால் கடவுள் பெயரில் நடக்கும் மூடநம்பிக்கைகளும் முட்டாள்தனமான சில செயல்களை கழுவி ஊத்துவும் மறந்ததில்லை
இந்த உலகத்தை ஏதோ ஒரு சக்தி ஆட்டுவிக்கிறது அது கடவுளாகவே இருந்துவிட்டு போகட்டுமே. அதிலென்ன பிரச்சனை.
 
சரி சித்தர் விசயத்திற்கு வருவோம் -

சித்தர்கள் பொது வாழ்க்கை நெறிக்கு உடன் படாதவர்களாகத் தங்களுக்கென்று தனி வாழ்வியல் வழி முறைகளை உருவாக்கி நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்த இயற்கையோடு இயற்கையான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் வாழ்கிறவர்கள். சித்தர்களுக்கு மனிதனிடம் எதிர்பார்ப்பு என்று எதுவுமே இல்லை. அவர்கள் வலியுறுத்துவது உண்மை, நேர்மை, கருணை, அன்பு, தூய்மையான வாழ்க்கை மட்டுமே. மற்றவர்களுக்கு உதவும் நல்ல எண்ணம், நல்ல செயல், நல்ல சிந்தனையோடு செயல்படுபவர்களுக்கு சித்தரின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

பல்லாயிரக்கணக்கான சித்தர்கள் உலகில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை வெறும் தமிழர்கள், இந்துக்கள் என்ற குறுகிய வட்டத்துக்குள் அடைக்க நாம் முயலக் கூடாது. நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்து தூய அற வாழ்வு வாழ்ந்தவர்கள், இன்னமும் சூட்சுமமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சித்தர்கள். அவர்கள் நம்முடைய தகுதிக் கேற்ப அவர்கள் உதவத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அருள் கிடைக்க நாம் செய்ய வேண்டியது தூய்மை யான வாழ்வு வாழ வேண்டியது மட்டுமே.
அவர்களின் கடைக்கண் பார்வைபட்டால், திருக்கரத்தால் ஆசிர்வதித்தால், மனிதனிடமிருந்து ஏதேனும் பொருளை வாங்கிக் கொண்டால், மனிதனின் கர்மவினையை அவர்கள் ஏற்றுக் கொண்டு, மாற்றுகிறார்கள் என்பது பொருள். அதன் பின் அம்மனிதனின் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும். ஆனால் ஒன்று. அத்தகைய சித்தர்களின் அருளைப் பெற மனிதனுக்கு முதலில் வேண்டியது நல்ல தகுதி. தகுதியற்றோருக்கும், நல்லெண்ணம் இல்லாதவர்களுக்கும் சித்தர்கள் உதவ மாட்டார்கள்.

உண்மையாய், நேர்மையாய், சுயநலமின்றி வாழ்ந்து, உலகின் உயர்வுக்கும், நலனுக்குமே எப்போதும் சிந்திப்பவர்களுக்கு சித்தர்களின் அருள் தரிசனம் கிட்டும். ஆனால் அதற்கான கொடுப்பினை, நல்வினை நமக்கு இருக்க வேண்டும்.
 
இதிலிருந்து சற்று மாறி தங்களது வாழ்க்கை நெறிகளை மாற்றி வாழ்பவர்கள் அகோரி சித்தர்கள். அதனை பற்றி பிறகு பார்ப்போம்.

சரி எனது வாழ்க்கையில் சித்தர்கள் தாக்கம் எப்படி?

கனவுகள் வருவது இயல்பு அந்த கனவுகளின் தாக்கமோ அதனை சார்ந்த நிகழ்வுகளோ விடிந்தும் தொடருகிறதென்றால் சற்று யோசிக்க வைத்துவிட்டது. முதல் நாள் இரவு கனவில் சித்தர் உருவில் தெருவில் அங்குமிங்குமாக அலைந்துகொண்டு வாசலை கடக்கும் போதெல்லாம் ஏதோ என்னிடம் சொல்ல முயல்வதும் பிறகு சொல்லாமல் செல்வதுமாக  கனவு முடிந்தது. அது அதோடு முடியவேண்டியது தானே ஆனால் இல்லை

மறுநாள் நண்பர் ஒருவரை எதேச்சையாக சந்திக்கின்றேன் அவரின் மொபைலை பார்க்கும் போது அதில் ஒரு பரதேசியை போன்ற நபர் ஒருவரின் புகைபடத்தை முகப்பில் வைத்திருந்ததை கண்டு நக்கலாக கிண்டலடித்தேன்.
அதற்கு நண்பர், உண்மைதான் நீங்கள் கிண்டலடிப்பது போல தான் அவரின் செயல்பாடுகளும் இருக்கும். பரதேசி போன்ற தோற்றமும் பத்தியக்காரத்தனமான உளறலும் தான் அவரின் சிறப்பு என்று மிகச்சாதாரணமாக சொன்னார்.

நானும் நக்கலாக அப்படி என்னதான் சிறப்பு என்று கேட்டேன்.
சில அற்புதங்களை சொல்லி கேட்கும் போது அது மேஜிக் வித்தை போல தான் நாம் பாவிக்க தோன்றும். நேரில் சென்று அதனை உள்வாங்கி உணரும் போது தான் சில சக்திகள் மீது நம்பிக்கை வரும். மேலும் 2 நண்பர்களுடன் நாளை அந்த அகோரி சித்தரை சந்திக்க போகிறேன் விருப்பம் இருந்தால் உடன் வருகிறாயா என்கிறார் நானும் சிறிதும் யோசிக்காமல் பட்டென சொல்லிவிட்டேன்.

காரணம் அங்கு சென்று இவர்களை மீண்டும் கிண்டலடிக்கும் நோக்கில்.
அதன்படி காலை 5 மணிக்கே குளித்து முடித்து 6 மணிக்கு பாபநாசத்திலிருந்து தஞ்சையை நோக்கி புறப்பட்டோம். 7:15க்கெல்லாம் தஞ்சையை அடைந்து அங்கிருந்து பட்டுக்கோட்டை பேருந்தில் ஏறி சரியாக 8:40க்கு பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தை அடைந்தோம். அங்கிருந்து சித்தரின் பீடம் அமைந்திருக்கும் #கார்கவாயல் செல்லும் பேருந்தில் ஏறி 10வது நிமிடம் அகோரி சித்தர் இடத்தை அடைந்தோம்.

 சித்தரை காண டோக்கன் முறை கடைபிடிக்கப்பட்டதை கண்டு மனதளவில் சித்தர் மேல் மேலும் கெட்ட அபிப்ராயம் அதிகரிக்க ஆரம்பித்தது. காரணம் நபர் ஒன்றுக்கு 100 ரூபாய் வசூலிப்பதால் இவரும் பணத்திற்காக தான் செயல்படுகிறார் என்று. அடுத்த நிமிடமே அந்த கெட்ட அபிப்ராயம் சுக்குநூறாகி உடைத்தெறியப்பட்டது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புவரை எந்த வித பணமும் வசூலிக்கபடாமல் தான் இருந்ததாம். வரும் பக்தர்கள் மதிய வேளை சாப்பாட்டிற்காக தொலைதூரம் செல்ல வேண்டியிருப்பதால் அவரை காண வரும் அனைவருக்கும் மதிய உணவளிக்க திட்டமிட்டு அதற்காக அந்த 100 ரூபாய் டோக்கன் வடிவில் வசூலிக்க படுகிறதாம். மேலும் அதிலிருந்து ஒரு ரூபாய்கூட சித்தருக்கு செல்வதில்லையாம்.


நண்பர் மற்றும் அவருடன் வந்த இரண்டு நண்பர்களின் டோக்கன் நம்பர் 64, 65, 66 (எனக்கில்லை). சித்தரின் பீடம் நுழையும் போதே ஆண்கள் மட்டும் மேல்சட்டையை கிழட்டு அறிவுறுத்தப்படுகிறார்கள்.  முக்கியமான விடயம் குடித்துவிட்டோ அசைவம் சாப்பிட்டுவிட்டோ அவரை பார்க்க செல்லக்கூடாது. அப்படி மீறி வருபவர்களை அவர் சந்திப்பதே இல்லை சில நேரம் காலால் எட்டி உதைத்துவிடுகிறார். சரியாக 10:15க்கு அகோரி சித்தர் அம்மன் சிலையுள்ள அந்த குடிலுக்கு வந்தார். 

டோக்கன் முறைப்படி ஒவ்வொருவராக சந்தித்து குறைகளை அவராக கண்டுபிடித்தும் சிலருக்கு அவர்கள் சொல்லி கேட்டும் விபூசி பூசி சரியாகிவிடும் என அனுப்புகிறார். சிலருக்கு செய்தித்தாள் பேப்பரை கண்ணைமூடி கிழித்து கொடுக்கிறார் அதில் உங்களுக்கான தீர்வு இருக்கிறது என்று சொல்லி அனுப்புகிறார். உதாரணத்திற்கு குழந்தை இல்லாத குறையாக வந்திருக்கும் பக்தர்களுக்கு கண்ணைமூடி கண்டபடி கிழித்து கொடுக்கும் பேப்பரில் குழந்தைப் படமோ இல்லை குழந்தை சம்மந்தமான எழுத்துக்களோ இருக்கிறது. யார் என்னை குறைநிவர்த்தி சொன்னாலும்  அதற்கான தீர்வையும் நம்பிக்கையும் அந்த துண்டு சீட்டில் இருப்பது என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

மதியம் 1 மணி ஆனது நாங்கள் மதிய உணவு சாப்பிட்டு வந்து மீண்டும் அமர்ந்தோம். 2 மணிக்கு மேல் நண்பரின் நண்பர் டோக்கன் அழைக்கப்பட்டது. எனக்கோ மிகுந்த ஆர்வம் என்ன நடக்க போகிறதோ உண்மையை சொல்லப்போகிறாரா இல்லை உடான்ஸ் விட போகிறாரோ என்று. 

ஆனால் சித்தரின் முதல்  வார்த்தையே என்னை பிரமிக்க வைத்துவிட்டது. வாடா ITI இன்ஜினீயரே என்கிறார். இல்லைய்யா நான் மெக்கானிக்கல் படிச்சிருக்கேன் நண்பர் சொல்ல அதற்க்கு அவர் ITI யில் இருந்தாண்டா மெக்கானிக்கல் வந்தது என்று சிரித்தார். கண்ணை மூடி ஒரு பேப்பரை கிழித்து என்னிடம் கொடுத்தார் அதில் Recruitment என்று வந்தது. அரசாங்க வேலைக்கு முயற்சி பண்ற போல என்று ஒரு துண்டு சீட்டை கண்ணை மூடி கொடுத்தார் அதில் முதல்வரின் படம் இருந்தது. அடுத்து காசெல்லாம் கொடுத்திருக்க போல என்று கொடுத்த செய்தித்தாள் சீட்டில் ஆயிரம் ரூபாய் நோட்டின் படம். அடுத்து ஒரு சீட்டு கொடுத்தார் அதில் கோட்ட பொறியாளர் என்ற வார்த்தை இருந்தது. அந்த நண்பரின் கண்களில் பொல பொலவென்று கண்ணீர் கொட்ட ஆரம்பித்து விட்டது. நாம் ஏதும் சொல்லாமலே நம்முடைய விசயத்தைத்தை தெள்ளத்தெளிவாக புட்டு புட்டு வைத்ததாலோ என்னவோ. ஏனென்றால் அவர் EB துறை சம்மந்தமாகத்தான் அரசு தேர்வு எழுதியிருந்தார். சீட்டில் கோட்ட பொறியாளர்  எழுதிய தேர்வும் பொறியாளர் சம்மந்தமான துறை. கேட்ட எனது உடலும் சிலிர்க்க ஆரம்பித்துவிட்டது. கவலை படாதடா சிக்கல்கள் நீங்கி  கிடைச்சுடும் போன்னு விபூதி கொடுத்து அனுப்பிவிட்டார்.
 
முதல் அதிர்ச்சியிலிருந்து மீண்டு வர இம்மியளவும் இடம்கொடுக்காமல் அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.
அடுத்து மற்றுமொரு நண்பர் சென்றதும் வாடா டிரைவர் இங்க ஓட்றியா வெளில ஓட்றியான்னு கேட்டதும் அப்டியே உறைந்து போயிட்டேன். எப்போ பர்மினன்ட் ஆவேன்னு கேட்டதும் சித்தர் கொடுத்த சீட்டில் உத்தரவு என்று வந்தது. பர்மனண்ட்  ஆயிட்டடா ஒரு மாசத்துல வந்துடும்னு சொன்னார். ஆர்டர் வந்ததும் ஒருமூட்டை அரிசியும் காய்கறியும் வாங்கி தருவியான்னு கேட்டார், நண்பரும் ஒத்துக்கொண்டார். கல்யாணம் எப்போ நடக்கும்னு கேட்டதுக்கு கொடுத்த சீட்டில் அனுமதின்னு வந்துச்சி. அனுமதி  கொடுத்திட்டேண்டா இன்னும் 3 மாசத்துல ஆயிடும் போயிட்டு வாடான்னு அனுப்பிட்டார்.
ஒரு வழியாக பார்த்துவிட்டு இரவு 10 மணிவாக்கில் பாபநாசத்தை வந்தடைந்தோம். பேருந்தை விட்டு இறங்கியதும்  அதிர்ச்சி தாக்கத்திலிருந்து மீளமுடியவில்லை ஏனென்றால் பேருந்தை விட்டு இறங்கிய நொடி அங்கு பேருந்துக்காக காத்திருந்த சக ஓட்டுநர் சொன்னார் உனக்கு CONFORM ORDER வந்திடுச்சு. GM டேபிள்ள உள்ள லிஸ்ட்ல உங்க பேர பார்த்தேன். நாளை உங்கள் கிளை பணிமனைக்கு அணுப்பப் பட்டுவிடும்னு.

அப்போது தான் சுத்தமாக இறை நம்பிக்கை ஆன்மீக நம்பிக்கை இல்லாத நான் சற்று பின்வாங்க நேரிட்டேன். மருத்துவரே கைவிட்ட பல பேரை இந்த அகோரி சித்தர் குணப்படுத்தி விடுகிறார் என்பதை நம்ப முடியவில்லைதான் ஆனால் நம்பாளும் இருக்கமுடியவில்லைய.  தீர்வு பெற்று குணமடைந்தவர்களும் நன்றி தெரிவிக்க நிறைய பேர் வந்திருப்பித்தனர். அவர்களின் அனுபவத்தை கேட்டறிந்த பின்பு நம்பிக்கையின் தன்மை வலுப்பெற தொடங்கியது.




சரி யார் தான் இந்த அகோரி சித்தர் அவருக்கு எப்படி இம்மாதிரியான சக்தி கிடைக்கப்பெற்றது என்பதை ஆராய தொடங்கினேன் அதன்படி ………
அவரை பற்றிய 3 மூன்று வீடியோ தொகுப்பு youtubeல் கிடைத்தது. 
2 தொகுப்பு ztamil தொலைக்காட்சியில் இடம்பெறும் நம்பினால் நம்புங்கள். மற்றொன்று வேந்தர் தொலைக்காட்சியில் வரும் மூன்றாவது கண்.  இந்த மூன்று வீடியோக்களே போதும் அவரைப்பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள.









ஸ்ரீ ஆதிசிவசக்தி சித்தர் ஞான பீடம்
கார்காவயல்,
பட்டுக்கோட்டை வட்டம்,
தஞ்சை மாவட்டம்.

வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது . உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!! ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.


0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls