Wednesday, June 20, 2012

எலிகளைக் கட்டுப்படுத்தும் இயற்கை முறை

கடந்த சில ஆண்டுகளாக வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனைக் குறைப்பதில் எலிகள் முக்கிய பங்கு வகிக்கிறது.
நமது நாடு முழுவதும் உணவு தானியங்கள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் 2 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை சேதத்தையும் இழப்பையும் எலிகள் ஏற்படுத்துவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
மிக அதிகளவு எலி தாக்குதலை குறிப்பிட்ட கால அளவில் கட்டுப்படுத்தவில்லை என்றால் சேதத்தின் அளவு நூறு சதவீதம் வரை உயர்ந்துவிடும் அபாயமும் உள்ளது.
இத்தகைய நடைமுறை சூழலில் சிறு மற்றும் குறு விவசாயிகள் நடுத்தர விவசாயிகள் மிகக் கடுமையான பொருளாதார இழப்பீடுகளை ஏற்படச் செய்யும் எலிகளை இயற்கை முறையில் கட்டுப்படுத்துவது எப்படி என தெரிந்துகொள்வது அவசியமாகும்.
இயற்கை முறையிலான எலிக்கட்டுப்பாடு குறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் தி.ராஜ்பிரவின் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள்.
நமது நாட்டில் எலிக்கட்டுப்பாட்டில் இந்தியா கழுகு ஆந்தை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இயற்கையில் மலை அடிவாரங்களில் காட்டுப்பகுதி மரங்களில் சிறிய குன்றுகளில் வசிக்கும் இவை எலிகளை உணவாக உட்கொள்ளும்.
எனவே தமிழக விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள இயற்கை வளங்கள் பெரிய மரங்களில் உள்ள ஆந்தை இருப்பிடங்களுக்கு எந்த விதமான சேதத்தை ஏற்படச்செய்யாமல் பாதுகாப்பது அவசியம்.
பின்னர் தங்கள் தோட்டங்களில் பறவை தாங்கிகளை அமைக்கவேண்டும். இரவு நேரங்களில் பறவை தாங்கிகளுக்கு வரும் ஆந்தைகள் எலிகளை உணவாக உட்கொள்ளும்.
காலை நேரங்களில் பிற பறவை வந்து அமர்ந்து பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் பூச்சிகளை உணவாக உட்கொள்வதால் எளிதாக விவசாயிகள் எலிகள் மற்றும் பூச்சி தாக்குதல்கள் வாயிலாக ஏற்படும் உற்பத்தி இழப்புகளை எளிதாக தடுக்கமுடியும்.
தற்போதைய நடைமுறை சூழ்நிலையில் மிகவும் குறைந்த செலவில் இயற்கை முறையில் உற்பத்தி பெருக்கத்தை எளிதாக பெறமுடியும். மேலும் விவசாய நிலங்களில் எலிகளை கட்டுப்படுத்த புள்ளி ஆந்தைகளும் முக்கிய பங்கு வகிக்கிறது. அவற்றிற்கு செயற்கையாக இருப்பிடப் பெட்டிகள் அமைத்து எலிகளை கட்டுப்படுத்தும் வேளாண் முயற்சிகளை சில மாநிலங்களில் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இயற்கை எலிக்கட்டுப்பாடு முறையின் பிற பயன்கள்:
சமுதாய எலிகளைக் கட்டுபடுத்தவனப்பகுதிகளை, மரங்களைப்பாதுகாப்பது. வாயிலாக பல இயற்கை சீற்றங்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.
வன மற்றும் மரப்பொருள்கள் வாயிலாக பலருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் ஆந்தைகள் சில வகையான சிறிய பாம்புகள் தேள்களை உணவாக உட்கொள்ளுவதால் விவசாயிகளின் உயிருக்கும் நல்லப் பாதுகாப்பு அரணாக அமையும்.
எனவே சமுதாய அளவில் கிராம புறங்களில் ஆந்தைகள் கொல்லப்படுவதைத் தடுக்க வேண்டியது அவசியமாகும்
தகவல்: முனைவர் தி. ராஜ்பிரவின், உதவிப்பேராசிரியர், வேளாண் விரிவாக்கத் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
நன்றி :
http://www.mssrf-nva.org/?p=3803
வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது . உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!! ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.


0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls