வரும் முன்னர் காப்பது தான் தடுப்பூசிகளின் வேலை. இது எவ்வாறு
சாத்தியமாகும்? வைரத்தை வைரத்தால் தான் வெட்ட முடியும் என்பது போல.... எந்த
நோயிலிருந்து குழந்தை பாதுகாக்கப்பட வேண்டுமோ... அந்த நோய்க்கிருமிகளை
எதிர்க்கக் கூடிய எதிர்ப்பு சக்தியை உடலில் உருவாக்குவதுதான் தடுப்பூசியின்
தத்துவம். ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது நாம் அறிந்ததே. நாம்
பெற்றெடுத்த செல்வங்களுக்கு நோயற்ற வாழ்வை உருவாக்கித் தருவதும்
பெற்றோர்களின் கடமை. இன்றைய கால கட்டடங்கள் தடுப்பூசிகளின் காலகட்டம்
என்றால் மிகையல்ல. விதவிதமான, வாய்க்குள் நுழையாத பெயர்களில் நோய்கள்
தாக்கக் கூடிய சூழலில்தான் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டியதாக
இருக்கிறது. ஆனால், மருத்துவத் துறையின் மகத்தான ஆராய்ச்சிகளின் விளைவாக,
பெரும்பாலான கடும்நோய்கள், பிறந்த குழந்தைகளைப் பாதித்து விடாமல்
பாதுகாப்பதற்காக பல்வேறு வகையான தடுப்பூசிகளை அறிமுகப்படுத்தியுள்ளன. மனித
வரலாற்றில், தடுப்பூசிகளின் மருத்துவ வெற்றியினால் உலகளாவிய அளவில்
கோடிக்கணக்கான நோய்கள் தடுக்கப்பட்டுள்ளதுடன்... ஆயுளும்
காக்கப்பட்டிருக்கின்றது. குழந்தைகளுக்காகப் பரிந்துரை செய்யப்பட்டுள்ள
தடுப்பூசிகளினால் ஏராளமான குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் பாதிக்கப்படக்
கூடிய பல நோய்களிலிருந்து பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. தடுப்பூசிகளின்
அறிமுகத்தால் மூளைக் காய்ச்சல், போலியோ, காசநோய், அம்மை நோய்கள் போன்ற பல
நோய்களின் பாதிப்பு வெகுவாகக் குறைந்து விட்டது. இத்தகைய தடுப்பூசிகளின்
அறிமுகத்திற்கு முன்பு ஆயிரக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டும் இறந்தும்
இருக்கின்றன. குழந்தைகளுக்கு, அந்தந்தக் காலகட்டங்களில் மருத்துவரின்
ஆலோசனைப்படி, தடுப்பூசி-களைப் போட்டு விடுவதன் மூலம்.. பெற்றோர்கள் தங்களது
குழந்தைகளைக் கடும் நோய் பாதிப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளலாம்.
தடுப்பூசிகளைத் தவிர்த்து விடுவதோ...தள்ளிப் போடுவதோ... குழந்தைக்கு ஆபத்தை
ஏற்படுத்தக் கூடியது என்பதைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.
குழந்தை பிறந்தவுடன்: காசநோய் (பி.சி.ஜி), போலியோ சொட்டு மருந்து, ஹெபடைடிஸ் பி முதல் டோஸ்
ஒன்றரை மாதத்தில்: டிபிடி (தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி தடுப்பூசி) மற்றும் போலியோ சொட்டு மருந்து, ஹெபடைடிஸ் பி இரண்டாவது டோஸ்
மூன்றரை மாதத்தில்: டிபிடி (தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி தடுப்பூசி) மற்றும் போலியோ சொட்டு மருந்து
நான்கரை மாதத்தில்: போலியோ சொட்டு மருந்து
ஐந்தரை மாதத்தில்: போலியோ சொட்டு மருந்து, ஹெபடைடிஸ் பி மூன்றாவது டோஸ்
ஒன்பதாவது மாதத்தில்: தட்டம்மை தடுப்பூசி மற்றும் போலியோ சொட்டு மருந்து
ஒன்றே கால் வயதில்: தட்டம்மை, ஜெர்மன் தட்டம்மை, புட்டாளம்மை தடுப்பூசி
ஒன்றரை வயதில்: டிபிடி (தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி தடுப்பூசி)
நாலரை வயதில்: டிபிடி (தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி தடுப்பூசி) மற்றும் போலியோ சொட்டு மருந்து

வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது .
உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!!
ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.
0 comments:
Post a Comment