Monday, June 25, 2012

கருவளையம் மறைய

பெண்களுக்கு அழகான கண்ணைச் சுற்றிலும் திடீரென்று தோன்றும் கருவளையத்தை பார்த்திருக்கிறோம். கண்களுக்கு கீழ் நோக்கினால் இந்த கருவளையத்தைக் கண்டுபிடித்து விடலாம்.
 
இதனால் பெண்களுக்கு அந்த கண்களே மைனஸ் பாயிண்ட் ஆக அமைந்து விடுகிறது. அந்த இடத்தில், சுமார் அரை அங்குலம் அகலத்திற்கு லேசான கருப்பு நிறத்தில் வில் போன்ற வளைவாக சருமம் காணப்படும். இது ஒரு பெண்ணின் முக அழகை முற்றிலும் கெடுத்து விடும்.
 
இந்த கருவளையம் ஏற்பட பல காரணங்கள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். முதல் காரணம், அந்த இடத்தில் தோல் அதிகமாக சுருக்கம் அடைந்து காணப்படுவது தான். அந்த சுருக்கமே கருப்பு நிறமாக மாறி, கருவளையத்தை ஏற்படுத்தி விடுகிறது.
 
சத்துக்கள் இல்லாத உணவு வகைகளை உண்பது கூட இதற்கு முக்கிய காரணமாக அமையலாம். தோலை வெளுப்படையச் செய்யும் தாது உப்புகளும், புரதமும், கொழுப்புச் சத்தும் உள்ள உணவுப் பொருட்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொண்டால் இந்த கருவளையம் நாளடைவில் மறைந்து விடும்.
 
கண்களுக்கு மிக அதிக வேலை கொடுத்தாலும் கருவளையம் வரலாம். அதாவது, அதிக நேரம் கண் விழித்து படிக்கும் பழக்கம் இருந்தாலோ அல்லது டி.வி. பார்த்து வந்தாலோ கருவளையம் தோன்றலாம். நீண்டகாலம் உடல்நலக்குறைவாக இருப்பதும், உணவு கட்டுப்பாட்டில் இருப்பதும்கூட இதற்கு மிக முக்கிய காரணமாக அமையலாம்.
 
சில பெண்கள் என்ன வேலையாக இருந்தாலும் இழுத்துப் போட்டுக் கொண்டு தாங்களே செய்வார்கள். அதிகப்படியான வேலையை தொடர்ந்து செய்யும் போது அதிகப்படியான சோர்வு ஏற்பட்டு, ஏற்பட்டு இக்குறைபாடு வந்துவிடும். ரத்தசோகை பாதிப்பு உள்ளவர்களுக்கும் கூட கண்ணில் கருவளையம் வரலாம்.
 
கருவளையத்தை எப்படி போக்கலாம் என்று பார்க்கலாம்.இதற்காக ரொம்பவும் கஷ்டப்பட வேண்டாம். அன்றாட சமையலில் கொஞ்சம் அக்கறை காட்டினாலே போதுமானது.கண்ணில் உள்ள கருவளையத்தை நீக்க இரும்புச்சத்து அதிகம் கொண்ட காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
 
முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, முள்ளங்கி, சின்ன வெங்காயம், பூண்டு, அவரைக்கீரை, ஆப்பிள், நெல்லிக்காய், விளாம்பழம், நாவல்பழம், கமலா ஆரஞ்சு, வாழைப்பழம், வெள்ளரிப்பழம், பாகற்காய், வாழைத்தண்டு போன்றவற்றில் இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளது.
 
பொன்னாங்கன்னி கீரையில் அதிக சத்து உள்ளது.இந்த காய்கறிகளை சமையலில் அதிகம் பயன்படுத்தினாலே நாளடைவில் கருவளையத்தின் பாதிப்பில் இருந்து தப்பிவிடலாம். அழகான கண்களுக்கு சொந்தக்காரி ஆகிவிடலாம்.கருவளையம் உள்ளவர்கள், இதுபோக இன்னொரு முறையையும் பின்பற்றலாம்.
 
வெற்றிலை போட பயன்படுத்தும் சுண்ணாம்பை ஒரு பட்டாணி அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு கப் குளிர்ந்த நீரில் கரைத்து சுமார் ஒரு மணி நேரம் அப்படியே வைத்து விடுங்கள். அந்த சுண்ணாம்பு நீரானது தெளிந்தவுடன், அதில் இருந்து 2 ஸ்பூன் தெளிந்த தண்ணீரை வேறொரு கிண்ணத்தில் பிரித்தெடுத்துக் கொள்ளுங்கள்.
 
பிரித்தெடுத்த தண்ணீரின் சிறிது எலுமிச்சைச் சாறும் பிழிந்து வடிகட்டிக் கொள்ளுங்கள். தொடர்ந்து, இரண்டையும் ஒன்றாக கலந்து, அதை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கண்ணை சுற்றி பூசுங்கள். கண்விழியில் பட்டுவிடக்கூடாது.இப்படி தொடர்ந்து செய்து வந்தால் சில நாட்களில் கண் கருவளையம் மறைந்து விடும்

நன்றி:மாலைமலர்
வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது . உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!! ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.


3 comments:

தஞ்சை தேவா said...

ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயில், மஞ்சள்பொடி, சிறிதளவு உப்பு கலந்து கருவளையத்தில் போட கருவளையம் குறையும்

தஞ்சை தேவா said...

சோற்று கற்றாழை ஜெல்லுடன் வெள்ளரிக்காயை சேர்த்து நன்றாக அரைத்து கண்களை சுற்றி இருக்கும் கருவளையத்தின் மீது தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் கருவளையம் குறையும்.

Unknown said...

நன்றி.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls