Saturday, June 2, 2012

"தஞ்சை தேவா" தளத்தை பற்றி...

ஒவ்வொரு தனிமனிதனும் வாழ்க்கையில் மேலும், மேலும் முன்னேறவே விரும்புகிறான். ஆனால், அறியாமை, கல்வியறிவின்மை, ஏழ்மை, சமூகக் கட்டுப்பாடுகள் போன்ற காரணிகளால் அவனது வளர்ச்சி தடைபடுகிறது.மேலும், ஒவ்வொரு தனிமனிதனின் சிறப்புத் திறன்களை வெளிப்படுத்தவும் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. இதனால், தனிமனிதன் மற்றும் சமுதாயத்தின் பொருளாதார வளம் குன்றுகிறது.இந்த நிலை மாற்றப்பட வேண்டும் .

இந்த தளத்தில் நமது வளர்ச்சிக்கு தேவையான கல்வி, பொருளாதாரம்,விவசாயம் , வேலைவாய்ப்பு ,மருத்துவம் ,
பாரம்பரியம், உடல்நலம், கணிபொறி மற்றும் தொழிநுட்பம் சம்மந்தமான பயனுள்ள தகவல்களை நண்பர்கள் நீங்களும் அறிந்து பயன்பெறும் வகையில் இந்த தளம் தொடங்கியுள்ளேன் .இந்த தளத்தில் காணப்படும் விவரங்களில், தகவல்களை அடிப்படையாகக் கொண்டவைகளை, முடிந்த வரையில் துல்லியமாகத் தருவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்க்கொள்ளப்படுகின்றன. பல்வேறு பிரபல வலைத்தளங்கள் , திட்டங்கள், பத்திருக்கைகள் ,கொள்கைகள் போன்றவற்றிலிருந்து எடுக்கப்பட்ட கட்டுரைகள், விவரிப்புகள் போன்றவற்றில் காணப்படும் அபிப்பிராயங்கள், கருத்துக்கள் ஆகியன "தஞ்சை தேவா " தளத்தின் அதிகாரப்பூர்வமான கருத்துக்களோ, அபிப்பிராயங்களோ அல்ல.
'தஞ்சை தேவா' தளத்தில் பதியப்படும் பெரும்பாலான கட்டுரைகள் ,பதிவுகள் பல்வேறு பிரபல வலைத்தளங்கள்,வலைபூக்கள், ஊடகங்கள் ,பத்திருக்கைகள் , விவரிப்புகள் ,ஈமெயில்கள், மூலமாகவும் இணையம் வலைதளங்களின் மூலமாகவும் பெறப்பட்டது .

தகவல்கள் பெறுவதற்கு உதவியாக இருந்த அனைத்து பிரபலவலைதளங்கள்,
பத்திருக்கைகள் ற்றும் எழுத்தாளர்களுக்கும் இந்த தளம் சார்பாக நன்றியை தெரிவித்துகொள்கிறோம் !

இமெயிலில் வரும் பதிவுகளை பதிவிடும் போது,அந்த பதிவு எந்த தளத்திலிருந்து எடுக்கப்பட்டது என்று தெரிய வாய்ப்பு இல்லாததால் தளத்தின் பெயரையோ ,வலைதளத்தின் இணைப்பையோ அல்லது கட்டுரையாளர் பெயரையோ பதிவில் எங்களால் குறிப்பிட முடியவில்லை .

தங்களின் பதிவுகள் மற்றும் படங்கள் இங்கு பகிர்வதால் தங்களுக்கு ஏதாவது பிரச்னை இருந்தால் சம்மந்தப்பட்ட வலைதள உரிமையாளர்கள் எங்களுக்கு தெரிவியுங்கள் நான் உடனடியாக அந்த பதிவை நீக்கிவிடுகிறோம் .



என்னை பற்றி
நான் தஞ்சை மாவட்டத்துல உள்ள சிறு கிராமத்துல பிறந்தேன் . சின்ன வயசுல நிறைய ஆசைகள் ஆமாங்க படிப்ப தவிர மத்த எல்லாத்துலயும்...படிப்புல கொஞ்சம் இல்ல இல்ல நிறையவே மக்கு தான் ...ஓரளவு படிச்சு அதே மாவட்டத்துலயே பை தூக்கிட்டு போற வேலைல சேர்ந்து இரண்டு வருஷம் குப்ப கொட்டினேன்...அதாங்க மார்கெட்டிங் எச்சுகூட்டிவ் வேலை :) ...




அப்பறம் சினிமாவுல காட்டுவாங்களே அதே மாதிரி நானும் வேலை தேடி மெட்ராஸ் பக்கம் வந்து பெரிய ஆளா வரணும்னு நினைச்சு வந்தேன் ...சண்டையில கிழியாத சட்டை எது ...அப்டிங்கற மாதிரி ஆரம்பத்துல வேலை கிடைகுறதே கஷ்டமா இருந்துச்சு ...அப்டியே கிடைச்சாலும் சம்பளம் பார்தீங்கனா அரை சாப்பாட்டுக்கும் பகிர்ந்து தங்கற இடத்து வாடகைக்குமே சரியா போய்டும் ...அப்டியே ஒரு வருஷம் கடந்துச்சு....அப்டி இப்டி போய் இப்ப ஏழு வருசத்துக்கு மேல ஆச்சு சென்னை வந்து ... இன்றைக்கு ஒரு கவுரவமான வேலையில ஆஆன்னு ஆச்சர்யபட்டு அண்ணாந்து பார்க்கிற சம்பள இல்லைனாலும், ஐயோ பாவம்னு பரிதாப படர நிலைமை இல்லாம ஒரு நடுத்தர சம்பளத்தோடு அடிப்படை வசதிகள் நிறைந்த ஒரு நல்ல நிறுவனத்தில் வலைதள வடிவமைப்பாளரா வேலைல இருக்கேன் .

என்னோட பொழுதுபோக்கு கண்டதையெல்லாம் படிக்கிறது ,பழைய பாடல்களா கேட்கறது ,வரலாற்று மற்றும் ஆய்வு படங்களை பார்க்கிறது , நல்லா சாப்பிடறது ,கருத்து பரிமாற்றம் செய்வது ...மருத்துவ குறிப்புகள சேகரிக்கறது ......ன்னும் நிறைய அடுக்கிகிட்டே போகலாம் ...
என்னுடைய எதிர்கால ஆசை என்னனா ஓய்வு காலத்தில் திட்டமிடப்பட்ட விவசாயம் செய்யனும் ,

சாதி பேதம் கடந்து ,சிறிதளவும் வரதட்சனையின்றி நானே தேர்ந்தெடுத்த அன்பான வாழ்க்கைத்துணை எங்களுகென்று அழகான குட்டி தேவதை இவர்களோடு சுகமான ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வாழ்கை பாதையில் பயணித்து கொண்டிருக்கிறேன் ...மின்னஞ்சல் :sollusaga@gmail.com
முகநூல் :
https://www.facebook.com/thanjaideva
-தஞ்சை தேவா
வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது . உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!! ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.


7 comments:

Raja said...

Arumai...............Valzkai ennum otta panthayathil odi sirithu kalithu thirumbi paarthal kadanthapathayin thuyaram puriyum athvey saathikkum uthvegathai meendum namakku alikkum........

Indian info Tech said...

namma vivasayam seyrappa vivasaya cooli kidapana... innaikulla sapada sapitu nameah ella vellayum seya mudiyuma nanbareah.!

Hari kumar said...

Vazha Valamudan

Unknown said...

marutuva kurippugala tarumbothu nalla parambaria mattrum pattatari siddha maruthuvargalin anubavangalai kettu pativu seyalam

மின்துறை செய்திகள் said...

வணக்கம் நண்பரே தங்களின் வலைப்பதிவை தொடர்ந்து படித்துவருகிறேன் பதிவுகள் பயனுள்ளதாக உள்ளது தங்களின் பதிவை எனது வலைதளத்தில் பதிந்து வருகிறேன் தங்களுக்கு ஆட்சேபணை இருப்பின் தெரியப்படுத்தவும்.
http://ganeshdigitalvideos.blogspot.com/

தஞ்சை தேவா said...

வணக்கம் கணேஷ் மூர்த்தி,
இதில் ஆட்சேபனை தெரிவிக்க ஏதும் இல்லை ...
நமக்கு தேர்ந்த நல்ல தகவல்கள் மற்றும் பயனுள்ள குறிப்புகள் அனைவரையும் சென்றடைய வேண்டுமென்பது தான் எனக்கும் ஆசை.தாராளாமாக பதிவிடுங்கள் .
எனது கொள்கையே படிப்போம்! பயனடைவோம்!! பகிர்வோம் !!!
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் .

Unknown said...

வாழ்க வளமுடன், தொடர்க நின் சேவை

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls