Friday, July 13, 2012

மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் தரமற்ற ‘நாப்கின்’களால் ஆபத்து – எச்சரிக்கை ரிப்போர்ட்

மாதவிடாய் காலத்தில் சுகாதாரத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் பயன்படுத்தப்படும் சானிடரி நாப்கின்கள் பெண்களின் ஆரோக்கியத்திற்கே ஊறு விளைவிக்கின்றன என்று அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவு ஒன்றை தெரிவித்துள்ளனர் ஆய்வாளர்கள். திருச்சியைச் சேர்ந்த முனைவர் முகமது ஷாபீர் என்பவர் ‘பயோ டெக்னாலஜி’ துறையில் செய்துள்ள ஆய்வு ஒன்றில் இது தெரியவந்துள்ளது.

பெரும்பாலான பெண்கள் இன்றைக்கு சிறுநீரக தொற்று, கர்ப்பப்பை கோளாறு, என பல பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றனர். இதற்குக் மாதவிடாய் காலத்தில் அவர்கள் பயன்படுத்தும் நாப்கின்தான் என்பது தெரியவந்துள்ளது. பொதுவாக, நான்கு லேயர்களைக் கொண்ட நாப்கினில் முதல் லேயர் சுத்திகரிப்பு செய்யப்படாத பிளாஸ்டிக் பொருளாலானது; இரண்டாவது லேயர், மறு சுழற்சி செய்யப்பட்ட, அச்சடிக்கப்பட்ட டிஷ்யூ பேப்பர்; மூன்றாவது லேயர்,ஜெல் (பெட்ரோலியப்பொருளால் தயாரானது); கீழ் லேயர் பாலிதீன். நாப்கினை உள்ளாடையுடன் ஒட்ட வைப்பது, தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் பசை வகை உள்ளது.

இரண்டாம் லேயரில் உள்ள அச்சடிக்கப்பட்ட டிஷ்யூ பேப்பரில் டையிங் ரசாயனம் இருப்பதுடன், ஹைப்போ குளோரைட் என்ற வேதிப்பொருளாலும் அந்த பேப்பர் பிளீச்சிங் செய்யப்படுகிறது. பெண்கள் இதைப் பயன்படுத்தும்போது, நுண்ணிய துகள்களாகப் படிந்திருக்கும் இந்த ரசாய னங்கள், ஈரப்பதத்தின் காரணமாக டை யாக்ஸேன் ஆக மாறுபாடடைகிறது. கேன்சர் நோய்க்கான மூலக்காரணிகளில் … இந்த டையாக்ஸேனும் ஒன்று. தவிர, இத்தனை ரசாயனங்களால் ஆன இந்த நாப்கின்களைப் பயன்படுத்துவதால் பிறப்பு உறுப்பில் அலர்ஜி, சிறுநீர் பாதையில் பிரச்னை, வெள்ளைப்படுதல், அதிகமான உதிரப்போக்கு, கர்ப்பவாய் கேன்சர் என்று பல பிரச்னைகள் வரிசையாக தாக்குகின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள். நாப்கின் தயாரிப்புக்குப் பிறகு, அவை பேக்கிங் செய்து அனுப்பப்படுவதிலும் போதுமான சுத்தம் இருப்பதில்லை என்றும் மற்றுமொறு குண்டு போடுகின்றனர் ஆய்வாளர்கள்.

அதிக விலை கொடுத்து வாங்கும் முன்னணி நிறுவன நாப்கின்களில் கூட தயாரிக்கப்படும் தேதிதான் இருக்குமே தவிர, காலாவதி நாள் என்பது குறிப்பிடப்படுவதில்லை. சில கம்பெனி தயாரிப்புகளில், ‘தயாரிக்கப்பட்ட தேதியில் இருந்து மூன்று மாதங்களுக்குள் பயன்படுத்தினால் நல்லது’ என்று மட்டுமே போட்டிருக்கிறார்கள் என்கின்றனர்.”இன்று பெண்களின் பூப்படையும் வயது 13 என் றாகிவிட்ட நிலையில், அதிலிருந்து மெனோ பாஸ் ஏற்படும் 45 வயது வரை, மாதத்தில் மூன்று, நான்கு நாட்கள் என கிட்டத்தட்ட 30 வருட ங்களுக்கும் மேலாக அவர்கள் மாதவிடாய் சமயங்களில் நாப்கின் உபயோகிக்க நேரிடுகிறது. ரசாயனக் கலவைகளால் உருவான நாப்கி னைத் தொடர்ந்து உபயோகிக்கும்போது, அதன் பக்கவிளைவுகள் தவிர்க்க முடியாததாகிறது” என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வெளிநாட்டில் நாப்கின் என்பது பெண்களின் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பொருள் என்று அக்கறைப்படுவதால், அதன் தரக்கட்டுப்பாட்டு சோதனையை வலுவாக்கி இருக்கிறார்கள் . இந்தியாவிலோ, விளம்பரங்களுக்குக் கொடுக்கும் முக்கியவத்துவத்தை, அதன் தர மேம் பாட்டுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கொடுக்காதது, நம் இந்தியப் பெண்களின் ஆரோக்கியத்தில் அவர்களும் அரசும் கொண்டுள்ள அலட்சியத்தைத் தான் காட்டுகிறது”.

விளம்பரங்களை மட்டுமே பார்த்து நாப்கின்களை வாங்குவோர், இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். ”மாதவிடாய்க் காலங்களில் தரமான நாப்கின்கள் உபயோகிக்க வேண்டும். அல்லது மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை கட்டாயம் நாப்கினை மாற்றிக் கொள்ள வேண்டும். இதுதான் பெண்களை பல பிரச்னைகளில் இருந்தும் பாதுகாக்கும்!” என்றும் ஆய்வாளர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
நன்றி :oneindia(boldsky)
(மயூரா அகிலன்)
வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது . உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!! ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.


0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls