Thursday, November 7, 2013

ஆரம்பம் - This is just a beginning...


ஆரம்பம்....

தளபதிய விட தலையோட ரசிகர்கள் அதிகமென்பதால் பயந்து போய் இந்த விமர்சனத்தை எழுதவில்லை. என் மனதுக்கு பட்டதை என்னுடைய பார்வையில் தோன்றியதை இங்கு கொட்டியுள்ளேன். நான் கொடுத்த 120 ரூபாய்க்கு நல்ல பொழுதுபோக்காக உணர்ந்தேன்.

நல்ல நோக்கம் பெரியயிடத்து ஊழல்களை ஓரளவு மக்களுக்கு உணர்த்தியது. இந்தியாவையே இப்போது ஆட்டிப் படைக்கும் ஊழலை பெரும்பாலும் ராணுவ தளவாடங்கள் பாதுகாப்பு வசதி போன்றக் ஊழல்கள் அடித்தட்டு மக்கள் வரை தெரியபடுவதில்லை. அந்த ஊழல்கள் எல்லாம் மேல் மட்ட அளவில் மிகவும் செக்யூராக மேல்மட்ட மத்திய மந்திரிகள் அளவில் மட்டுமே நடைபெற்று துளியும் நமக்கு கசியாமல் இன்றளவும் சுரண்டபடுவதை தைரியமாக வெளிச்சம் போட்டுள்ளது. மேல்மட்ட தனிப்படை போலிஸ்(force) சம்மந்தமான நடவடிக்கைகள், சண்டைகள் எல்லாம் பெரும்பாலும் கன்(துப்பாக்கி) அளவில் மட்டுமே இருக்கும் என்பதை சரியாக வெளிகாட்டியுள்ளர்கள். விஜயகாந்த் போல் எப்போதும் கட்டுமார் கட்டி காலை தூக்கி வெறுப்த்தாமல் சரியாக துப்பாக்கிகளின் சத்தத்தில் காட்சியமைத்து கலக்கி இருக்கிறார் விஷ்ணுவர்த்தன்.

லாஜிக் விசயத்தில் பல இல்லை இல்லை பல பல இடங்களில் லாஜிக்கே இல்லாமல் காட்சியமைதுள்ளார் விஷ்ணுவர்த்தன். போலிஸ் உயர் அதிகாரியை கொன்றுவிட்டு மாறுவேசமின்றி விமான நிலையம் சென்று துபாய் செல்லும் அளவிற்கு லாஜிக்கில் பிண்ணி எடுத்திருக்கிறார் விஷ்ணு. அது என்னமோ தெரியவில்லை தலையோட தலை மட்டும் மும்பை விமான நிலைய CCTV கேமரா முதல் கோடிகணக்கில் டெபாசிட்டை ஏற்றுக்கொள்ளும் பிரபல துபாய் வங்கியின் CCTV கேமராவில் கூட தலையின் தலை தப்பிக்கிறது.

தளபதிக்கு தமிழ் வசனங்களில் இருக்கும் கம்பீரம் தலைக்கு ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் அருமையாக பொருந்தியுள்ளது. தளபதிக்கு சுட்டு போட்டாலும் ஹிந்தி வராதாது நாம் அறிந்தது ஏதோ எழுதிவைத்து படிப்பது போல் துப்பாக்கியிலும் தலைவாவிலும் சமாளித்திருப்பார் ஆனால் அவருக்கு ஒட்டவில்லை.

தன்னுடைய வயதிற்கு ஏற்ற மிகைபடுத்தாத தோற்றம் காதல் டூயட் இல்லாமல் தன்னை தனிமை படுத்தி யதார்த்தத்தை உணர்த்தியுள்ளார். தொப்பை இருந்தாலும் மறைக்காமல் தன்னுடைய தொப்பை தான் என்பதை பல பல காட்சிகளில் நமக்கு தெரியும்படி காட்சியமைதுள்ளர்கள். தாடியுடனும் தாடியற்றும் படு ஹேன்சமா காட்சியளிக்கிறார்.
கோட் சூட் கூலிங்க் கிளாஸ் போட்டு படம் பூரா நடக்கிறார் என்ற புகார்கள் தலை தூக்காமல் இருக்க இந்தப்படத்தில் அவர் ஜீன்ஸ் பேண்ட் - டி சர்ட்டில் தான் படம் முழுக்க வர்றார்.

என்ன தான் டெக்னாலஜி இம்ப்ரூவ் ஆனாலும் கடைசில நாம கைநாட்டு (ஃபிங்கர் பிரிண்ட் ) தான் என்று தலையின் டயலாக் flow அருமை.  வில்லனுக்கே உண்டான எகத்தாள உடலமைப்பு தலைக்கு பிளஸ்.

ஆரியா நல்ல நடிச்சிருகாறு அவருக்கு உண்டான ஸ்பேசையும் சற்றே விட்டுக் கொடுத்திருக்கிறார் அஜீத். சில காட்சிகளில் ஆர்யா அஜீத்தை கை ஓங்குகிற அளவுக்கு போகிறது அதுதான் தலையின் பெருந்தன்மை.

டாப்ஸியின் பளீர் சிரிப்பு கொஞ்சம் கவர்கிறது..!
டாப்சி  இளமைத்துள்ளல் . ஆர்யா காதலை வெளிப்படுத்தும்போது யோசிப்பவர்  பின் இயல்பாய் மனதில் காதல் மலரும்போது ஆஹா போட வைக்கிறார் .  கடைசிவரையிலும் ட்ராமா குயின் அழகாய் நடித்திருக்கிறது. 


நயன்தாராவை அதுக்காக அருமையாக நல்ல விசாலமாக பயன்படுத்தி இருக்கிறார்கள். அதீத  கவர்ச்சி மட்டும் தான் சற்று  முகசுழிக்க வைக்கிறது. அதனை தவிர்த்து தனக்கு கொடுக்கபட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக தெளிவாக நடிப்பில் நல்ல முதிர்ச்சியுடன்   நடித்திருக்கிறார்.




பாடல்கள் பலமுறை கேட்டால் மட்டும் முமுனுக்க வைக்கும். மற்றபடி not bad.  டயலாக் தெளிவாக நம்மை வந்து சேரும் அளவிற்கு துல்லியமாக பின்னணி இசை அருமையாக நகர்ந்துள்ளது. ஒளிபதிவு துல்லியம்.

டுகாட்டி பைக் தலைக்காகவே வடிமைதுத்தது போல் அப்படி ஒரு அம்சம். அஜீத்தின் ஒஸ்தியான தோற்றம், அலட்டலில்லாத நடிப்பு அருமை. பஞ்சு டயலாக்குக்கு வேலை இல்லை. ஒருமுறை திரையரங்கிலும் பலமுறை CD யிலும் பார்க்கலாம். என்னை பொறுத்தவரை படம் ஒகே .

கடைசி வரை தல தண்ணியும் அடிக்கல சிகரெட்டும் குடிக்கல நன்றி தல.
வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது . உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!! ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.


5 comments:

lokseh said...

Good review.

Hari kumar said...
This comment has been removed by the author.
Hari kumar said...

Arumaiaana vimarsanam,Thangai Deva. Inthai podru matra padangalakum ungal vimarsanam tharuvirgal endru nanbukiran

Unknown said...

nice

Unknown said...

Well begin is half done. iam started this diwali with thala film arambam.it was really super for me this like thala diwali. Thala acting is very good. lift scene and bike and boat seen are workout for thala only. make it simple. Thala pola varuma. very good film.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls