Thursday, January 9, 2014

நம்முடைய விவசாயத்தோடு விளை(லை)யாடிய அமெரிக்கன்

தன் சுய லாபத்திற்காக நம்முடைய விவசாயத்தோடு விளை(லை)யாடிய அமெரிக்கன்:
தமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி, தஞ்சா வூர் போன்ற மருத நிலங்களில் செந்நெல் அமோகமாக விளைந்தது. 'மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று, ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென் மதுரை’ என்ற பழம் பாடலே இதற்கு சாட்சி.

சிவப்பு நெல் மட்டும் இந்த அமைப்பில் விசேஷமானது. இதன் சத்துக்கள் அனைத்தும் மாவுப்பகுதி வரை உட்சென்று சேமிக்கப்படுவதால், இது தீட்டப்பட்ட பின்பும் அதை நாம் பெற முடியும். மேலும் எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி-1, பி-3, பி-6 ஆகிய வைட்டமின்கள் - எந்த அரிசியிலும் காணமுடியாத அளவுக்கு இரும்புச் சத்து - ஜிங்க் (Zinc), மாங்கனீஸ், மெக்னீஷியம், செலினியம், பாஸ்பரஸ் போன்ற கனிமங்கள் - மிகுதியான நார்ச்சத்து (Fibre) என சிவப்பரிசியில் அடங்கியிருக்கின்றன. தன்னிடம் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும் ஆன்த்தோசயனின், பாலிஃபீனால் போன்ற வேதிப்பொருட்களும் இதில் சங்கமித் திருக்கின்றன.

இதையெல்லாம்விட, சிவப்பு அரிசியில் மானோகோலின் - கே (Monacolin K) என்கிற அற்புத வேதிப்பொருள் உள்ளது. இதைத்தான் மருத்துவத்துறையில் இப்போதும் 'லோவாஸ்டேடின்' (Lovastatin) என்ற பெயரில் ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதற்காக உலகெங்கும் கொடுத்து வருகிறோம். செந்நெல்லின் மீது வளரும் ஒரு வகை பூஞ்சணம்தான் (Yeast), இந்த லோவாஸ்டேடினை உற்பத்தி செய்கிறது. அதனால் சீனாவில், செந்நெல் மீது இந்த பூஞ்சணத்தை இவர்களாகவே வளர்க்கிறார்கள். 'சிவப்பு பூஞ்சண அரிசி' (Red yeast rice) என்று இதற்குப் பெயர். இதைத் தவிர, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ஈரல் வியாதிகள், பித்தப்பை கற்கள், ஆஸ்துமா மற்றும் பலவித ஒவ்வாமைக்கும் (Allergy) சிவப்பு அரிசி நல்ல மருந்து.

சிவப்பு நெல்லுக்கு உரம் இட்டாலும் சரி, இடாவிட்டாலும் சரி, பூச்சிக்கொல்லி மருந்துகள் எதுவுமே இல்லாமல், பூச்சிகளை அண்டவிடாமல் அமோகமாக வளரும் தன்மை உண்டு. ஆனால், ஆங்கிலேயர்கள், குறிப்பாக அமெரிக்கர்கள், பல சத்துகள் நிறைந்த இந்த அரிசியை களைப்பயிர் (Weed) என்றார்கள். சிவப்பு நெல்லை சிவப்பு அரக்கன் (Red Menace) என்றும், கொழுத்த பிச்சைக் காரர்கள் (Fat beggars) என்றும் அழைத்தார்கள்.

பெருமைகள் வாய்ந்த சிவப்பு அரிசி... இப்போது காணாமல் போன மர்மம் என்ன?

அமெரிக்ககாரன் பணம் சம்பாதிக்க இரசாயின உரம் தயார் பண்ணி அத விக்கிறதுக்கு இடம் தேடினான். எங்கெல்லாம் வெயில் அதிகமா இருக்கோ அங்கே எல்லாம் வெளச்சல் அதிகமா இருக்கும் நிறைய பயிர் தொழில் நடக்கும். இந்த நாடுகள் எல்லாத்துக்கும் பச்சை புரட்சின்னு ஒரு திட்டத்த வகுத்து கொடுத்தான்.

இதான் தென் அமெரிக்க நாடுகள், ஆப்ரிக்க நாடுகள், ஆசிய நாடுகள் இப்படி எல்லா இடத்துலயும் பயன்படுத்த பட்டது. அதுல இந்த உறகம்பேணி முதாலாளிகளுக்கு நெறைய லாபம் வந்தது. ஆனா நம்ம நெல்லு வந்து அவனோட உரத்துக்கு ஏத்தது இல்லாமல் போக, அதாவது இந்த உரத்த அதிகமா போடும் போது நம்ம நெல்லு சாஞ்சுபோயிடுச்சு.

அதனால அவங்க என்ன செஞ்சு பாத்தாங்க ஜப்பான்ல இருந்து குள்ளரக நெல்லா கொண்டு வந்து பயிர் பண்ண சொன்னாங்க. இப்ப அது ரசாயின ரக உரம் போடும் போது அது சாயல. அதனால இந்திய விஞ்சானிகளுக்கு ஓசனை சொன்னான் அமெரிக்கன், அதாவது ஜப்பான் நெல்லையும் இந்திய நெல்லையும் ஓட்டுங்கனு. அப்படி ஓட்டுன நெல்லு இரசாயின உரம் போட்ட போது சாயல.

ஆகையினால என்ன பண்ணான் சர்வதேச ஆராச்சி நிலையம் அதாவது "International Rice Research Institute" பிலிப்பைன்ஸ்ல இருக்கு.  அதோட சுருக்கம் தான் IR. அரிசி விளையுற நாடுகளுகேல்லாம் அனுப்பி பரப்பினான். (மேற்கூறிய உரம் திணிப்பு  பற்றிய விளக்கம் நம்மாழ்வாரின் வீடியோவிலிருந்து எடுத்து எழுதியுள்ளேன்)
IR 8 முதல்ல அறிமுகபடுதினாங்க அது குள்ள ரகமா இருந்தது அது சாயல அதுவும் சாயல.ஆனா  என்ன பண்ணுச்சு அதிக ரசாயின உரம் போட்டதால திங்கறதுக்கு ருசி நல்லா இல்ல. மக்கள அத வேண்டாம்னு ஒதுக்கினதும் மறுபடியும் IR5 னு கொடுத்தான் .IR20 ,IR22 IR36 IR63 கொடுத்தான்.

அப்பறம் இந்தியாவுலையே நீங்களே உற்பத்தி பண்ணிகோங்கன்னு இப்போ நம்மகிட்டே விட்டுட்டான். ஆக அவனோட ரசாயின உரம் பயன்படுத்தி IR  வகையான நெல் ரகங்களை இப்ப வரைக்கும் பயன்படுதிகினுஇருக்கோம். அவன் ரசாயின உரத்த விக்க எவ்வளவு கோல்மால் வெலையை பார்துருக்கானு பாருங்க.

இயற்கையா வெளையுற பாரம்பரிய நெல்லையை மாத்தி போட்ட அவலம். இனியாவது சிந்திப்போம்!!!  

இயற்கையோடு ஒன்றி!
இயற்கையை நேசித்து
இயற்கையோடு உறவாடி!
இயற்கை எய்வோம்!
-தஞ்சை தேவா

வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது . உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!! ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.


0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls