Wednesday, September 17, 2014

1987 செப்டம்பர் 17 - தமிழக வரலாற்றில் மிகப்பெரிய சகாப்தம்.


(வன்னியர்களின் உயிரிழப்பால் பலனடைந்தது வன்னியர்கள் மட்டுமல்ல, கீழே உள்ள பட்டியலில் இருக்கும் அனைத்து சாதியினரும் தான்)
வன்னியர் உட்பட அனைத்து சாதியினருக்கும் சாதிவாரி மக்கள்தொகைக்கேற்ப இடஒதுக்கீடு கோரி 1987ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி தந்தை பெரியாரின் பிறந்த நாளில் தொடங்கி ஒருவாரத்திற்கு தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற 21 பேரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர். ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட் டோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வாறு 7 நாள் சாலை மறியல் போராட்டத்தில் 21 உயிர்களை பலி கொடுத்து ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்டோர் சிறை கொடுமைகளை அனுபவித்து வன்னியர்களோடு மற்ற 107 சமுதாயத்தினருக்கும் சேர்த்து 20 விழுக்காடு இடஒதுக்கீடு பெறப்பட்டது தமிழக வரலாற்றில் மிகப்பெரிய சகாப்தம்.
சமூகநீதிக்கான போராட்டத்தில் உயிர்நீத்தவர்கள் அதிகம் படிப்பறிவில்லாத ஏழைகள். அவர்களது குடும்பத்தினரும் கூட குறிப்பிடத்தக்க அளவுக்கு கல்வித்தகுதி பெற்றவர்கள் இல்லை. 20 சதவீத இட ஒதுக்கீட்டால் உயர்க்கல்வியையோ, அரசு வேலை வாய்ப்பையோ பெரும் அளவுக்கு இவர்களது குடும்பங்களில் தகுதிபெற்றவர்கள் பெரிதாக இருக்கவில்லை.
ஆனாலும், தம்மைப்போன்று எதிர்கால தலைமுறை வன்னியர்கள் வாழ்விழந்து போய்விடக் கூடாது என்கிற நோக்கில்தான் - கண்காணாத, இன்னும் பிறக்காத எதிர்காலத் தலைமுறையினருக்காக இவர்கள் சாலைமறியல் போரில் பங்கேற்றனர், உயிர்த்தியாகம் செய்தனர்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர்(MBC) இட ஒதுக்கீட்டில் - கல்வி அல்லது வேலை வாய்ப்புகளைப் பெற்று இன்று பல பதவிகளிலும் பலநாடுகளிலும் நல்ல நிலையில் இருக்கும் ஆயிரக்கணக்கானோருக்கு வாழ்வளித்தது இந்த தன்னலமற்ற தியாகம்தான்...
வன்னியர்களின் உயிர்த்தியாகத்தாலும், தமிழகத்தில் MBC பட்டியல் உருவானது. வன்னியர்களின் உயிரிழப்பால் பலனடைந்தது வன்னியர்கள் மட்டுமல்ல, கீழே உள்ள பட்டியலில் இருக்கும் அனைத்து சாதியினரும் தான்.
வன்னியர்களின் இந்த சமூக நீதி போராட்டத்தை காழ்ப்புணர்வுடன் அனுகுபவர்கள் உபயோகிக்கும் சொல், ‘மரம்வெட்டி’. இந்த மரம்வெட்டிகள் தான், தமிழர்களின் உரிமைக்கான பல போராட்டங்களிலும் முன் நிற்கிறார்கள்.
————
List of Most Backward Classes in TN
1 Ambalakarar
2 Andipandaram
2(A) Arayar (in Kanniyakumari District)
3 Bestha, Siviar
4 Bhatraju ( other than Kshatriya Raju )
5 Boyar, Oddar
6 Dasari
7 Dommara
Eravallar ( except in Kanniyakumari District and Shencottah Taluk of Tirunelveli District where the community is a Scheduled Tribe )
9 Isaivellalar
10 Jambuvanodai
11 Jangam
12 Jogi
13 Kongu Chettiar ( in Coimbatore and Erode Districts only )
14 Koracha
15 Kulala (including Kuyavar and Kumbarar )
16 Kunnuvar Mannadi
18 Kuruhini Chetty
18(A) Latin Catholic Christian Vannar (in Kanniyakumari District)
Maruthuvar, Navithar, Mangala, Velakattalavar, Velakatalanair and Pronopakari
20 Mond Golla
21 Moundadan Chetty
22 Mahendra, Medara
23 Mutlakampatti
24 Narikoravar
25 Nokkar
25(A) Panisaivan / Panisivan
26 Vanniakula Kshatriya ( including Vanniyar, Vanniya, Vannia Gounder, Gounder or Kander, Padayachi, Palli and Agnikula Kshatriya )
27 Paravar ( except in Kanniyakumari District and Shencottah Taluk of Tirunelveli District where the Community is a Scheduled Caste )
27A Paravar converts to Christianity including the Paravar converts to Christianity of Kanniyakumari District and Shencottah Taluk in Tirunelveli District.
28 Meenavar ( Parvatharajakulam, Pattanavar, Sembadavar ) ( including converts to Christianity )
29 Mukkuvar or Mukayar ( including converts to Christianity )
30 Punnan Vettuva Gounder
31 Pannayar ( other than Kathikarar in Kanniyakumari District )
Sathatha Srivaishnava
( including Sathani, Chattadi and Chattada Srivaishnava )
33 Sozhia Chetty
34 Telugupatty Chetty
Thottia Naicker ( including Rajakambalam, Gollavar, Sillavar, Thockalavar , Thozhuva Naicker and Erragollar)
36 Thondaman
36(A) Thoraiyar ( Nilgris)
36(B) Thoraiyar (Plains )
37 Valaiyar (including Chettinad Valayars)
38 Vannar ( Salavai Thozhilalar ) ( including Agasa, Madivala, Ekali, Rajakula, Veluthadar and Rajaka) (except in Kanniyakumari District and Shencottah Taluk of Tirunelveli District where the community is a Scheduled Caste )
39 Vettaikarar
40 Vettuva Gounder
41 Yogeeswarar
etc...
————
Source:
Government of Tamil Nadu
Department of Most Backward Classes Welfare,
Ezhilagam Annexe, Chepauk,
Chennai-600 005.
வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது . உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!! ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.


0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls