Tuesday, June 19, 2012

முதன்முறையாக உறவில் ஈடுபடும்போது, வலி ஏற்படுமா?

பெரும்பாலான பெண்கள் முதன்முறை உறவில் ஈடுபடும்போது வலியை உணர்கிறார்கள். வலி உண்டாவதற்கு முதன்மை காரணமாக இருப்பது, பெண் உறுப்பை மூடி இருக்கும், சருமத்தின் உட்புற அடுக்கான 'கன்னி சவ்வு' முதன் முறை உறவு கொள்ளும் போது கிழிய நேரிடுவதே ஆகும். ஆனால் இது எல்லா பெண்களுக்கும் ஏற்படுவதில்லை. உங்களுக்கு 'கன்னி சவ்வு ' இருக்குமானால், முதல் உறவின் போது, வலியோ, அல்லது சிறிய அளவிலான இரத்தப்போக்கோ ஏற்படலாம் அல்லது ஏற்படாமல் இருக்கவும் வாய்ப்பு உள்ளது. சில பெண்கள் வலியை உணர்வதே இல்லை, அது போல் எல்லா பெண்களுக்கும் 'கன்னி சவ்வு' கிழியும் போது இரத்தப் போக்கு நிகழ்வதில்லை. சில பெண்களுக்கு 'கன்னி சவ்வு' இல்லாமலே இருக்கும்.

மேலும் சில பெண்களுக்கு, கன்னி சவ்வானது, முதன் உறவுக்கு முன்னரே கிழிந்திருக்கவும் வாய்ப்பு உள்ளது. இது கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடுவதாலேயோ, அல்லது விபத்திலோ, சுய இன்பத்தில் ஈடுபடுவதாலோ நிகழலாம். உறவில் ஈடுபட பால் ரீதியாக ஒரு பெண் தயாராகும்போது, அவளுக்கு தானகவே சுரக்கும் திரவமானது , உறவின் போது உராய்வை குறைக்கும். ஆனால் இது எல்லோர்க்கும் நிகழ்வதில்லை, அதே போல் இந்த திரவ சுரப்பு மட்டுமே, உறவினால் ஏற்படும் வலியை குறைக்க போதுமானதல்ல. முதன்முறை உறவுகொள்வோர் தாங்கள் பால் ரீதியாக உடல் உறவுக்கு தயாரானவரா என்பதை உறுதி செய்துக்கொண்டு , பின்பு தயக்கம் ஏதும் இன்றி உறவில் ஈடுபடலாம். உறவின் போது உராய்வை குறைக்க, கிளிசரின் அற்ற முறையான திரவங்களை மருந்து கடைகளில் வாங்கி பயன்படுத்தலாம்.

உறவுக்கு முன்பான, உங்கள் பொழுதை மகிழ்ச்சி தரும் சிற்றின்ப விளையாட்டுகளில் கழிப்பது, உங்கள் உறுப்பை உடலுறவின் போது ஊடுருவலுக்கு தயாரானதாய் மாற்றும். உறவின் போது வலியானது , உறுப்பின் ஆழத்திலும், அதிகமாகவும் இருக்குமானால், அது மேற்குறிப்பிட்டது போல் சாதாரணமாக எல்லோர்க்கும் நிகழ்பவை அல்ல. உறவினாலான வலி கிருமிகளின் தொற்றுதலுக்கோ அல்லது வேறு ஏதாவது மருத்துவ நிகழ்வின் அறிகுறியாகவோ இருக்கவும் வாய்ப்பு உண்டு. பெரும்பாலும் இது, உங்கள் உறுப்பு பால் ரீதியாக உறவுக்கு இன்னும் தயாராகவில்லை என்பதன் அடையாளமாக கூட இருக்கலாம். எப்போதுமே நீங்கள் உறவு கொள்ளும்போது வலி இருந்தால், உடனடியாக நீங்கள் மருத்துவரை சந்திப்பதே நல்லது.
வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது . உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!! ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.


0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls