Tuesday, June 19, 2012

பெண் கருத்தரிப்பின்மை - காரணங்களும், தீர்வும்


Test Tube Babies ஹார்மோன் குறைபாடு இருக்கும் பெண்களுக்கு கருமுட்டை உற்பத்தியாகாமல் போய்விடும். இதனால் குழந்தைப்பேறு பாதிக்கப்படும். சில பெண்களுக்கு கர்ப்பப்பை வளர்ச்சி இல்லாமல் இருக்க வாய்ப்புண்டு. கருக்குழாய் அடைப்பு இருந்தால் கருத்தரிக்க வாய்ப்பே இல்லை. ரத்தசோகை, புரதச் சத்துக் குறைவு ஆகியவையும் மலட்டுத்தன்மைக்கு காரணங்களாகின்றன.

ஆணுக்கு விந்தணு குறைபாடு இருந்தாலோ அல்லது பெண்ணுக்கு கருமுட்டை பாதிப்பு இருந்தாலோ அவற்றை மருந்து கொடுத்து சரிப்படுத்தி விடலாம். கருக்குழாயில் அடைப்பு இருந்தால் அதை மருந்து கொடுத்து சரிப்படுத்த முடியாது. இத்தகைய குறைபாடு உடையவர்களுக்கு சோதனைக்குழாய் முறை கைகொடுக்கிறது.

ஆணின் உயிரணுக்களையும், பெண்ணின் கருமுட்டையையும் உடலுக்கு வெளியே இணைத்து கருவுறச் செய்து மீண்டும் கர்ப்பப் பையில் கொண்டு வந்து வைப்பதே சோதனைக்குழாய் முறையாகும். உலகின் முதல் சோதனைக்குழாய் குழந்தை இலண்டனில் உள்ள பான்ஹால் மருத்துவமனையில் 1978 ஜூலை 25ம் தேதி பிறந்தது. அந்தக் குழந்தையின் பெயர் லூயி பிரவுன்.

நன்றி: கீற்று
http://www.keetru.com/medical/sex/pregnancy_1.php

வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது . உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!! ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.


0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls