இதைப்போலவே மனம் சார்ந்த பிரச்சனை களில், பாலியல் சிக்கல்களும் ஒரு வெளிப்பாடாக அமைகிறது. பாலியல் பிரச்சனைகள் பற்றி முக்கிய மாக அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டியது இரண்டு அம்சங்கள். ஒன்று இந்தப் பிரச்சனைகள் பொதுவானவை. மற்றொன்று தற்காலிகமானவை. எல்லோருடைய வாழ்விலும் பாலினப் பிரச் சனைகள், சிக்கல்கள் வந்து பின்பு மறைந்து போய் இருக்கும்.
பாலுறவு சிக்கல்கள் - இரு பாலினரிடமும் தோன்றுவதாக இருந்தாலும், ஆண்களே இதனை வெளியில் காட்டிக் கொள்கின்றனர். பெண்கள் தங்களின் பிரச்சனைகளை தங்களுக்குள்ளேயே வைத்து சுமக்கின்றனர். சிலர் தங்களின் நம்பகமான ஒரு சிலரிடம் பேசுவதுண்டு. இன்றுள்ள சமூக அமைப்பு உளநோய்கள் பற்றி பிறரிடம் பேசுவதைக் கூட களங்கமாக எண்ணுகிறது. தயக்கம் காட்டுவ தற்கு இது ஒரு காரணம். எனவே மன நல ஆலோச கர்கள் எப்படி இப்பிரச்சனையை அணுகுவது என்பதில் நுட்பம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு கேட்காத, இடையூறு இல்லாத தனிமையான இடமாக இருப்பது அவசியம். குடும்ப பிரச்சனைகளுக்கு பின்னணியில் பாலின்ப சிக்கல் இருக்கிறதா என அறிவது அவசியம்.
உடல் உறவு திருப்தியாக உள்ளதா என்பதை அறிய குடும்ப வாழ்க்கை எப்படி உள்ளது? கடைசி யாக உறவு கொண்டது எப்போது என்பது போன்ற விபரங்களைக் கேட்பது அவசியம். கேள்விகள் கேட்கும் போது ஏனோ தானோ எனக் கேட்காமல் ஈடுபாட்டுடன், உண்மையான அக்கறையுடன் கேட்பது நல்லது. பாலியல் விழிப்புணர்வு உள்ளவர் களிடம் நேரடியாக கேட்கலாம். என்னிடம் ஆலோ சனைக்கு வந்த ஒரு பெண்மணி, தனது வயதுக்கு வந்த இரண்டு மகள்களின் முன்பாகவே, “எனது கணவர் தினந்தோறும் உடல்உறவு கொள்ள முயற்சிக்கிறார். இவர்கள் திருமணமாகாமல் வீட்டிற்கு இருக்கும்போது, இப்படி அநாகரிகமாக நடந்து கொள்கிறார். முடியாது என்றால் அன்று ஒரு ரணகளமாகவே வீடு மாறி விடுகிறது. என்ன செய்வது?” என்று கேட்டார்.
இப்படி கேட்டது அவரது மகள்களிட மிருந்த ஆதங்கத்தை சமனப்படுத்த பயன்பட்டது. அவர் தான் அப்படி என்றால் “ஏன் எங்களது அம்மா அதற்கு சம்மதிக்க வேண்டும்?” என்று அவர்கள் கேட்டனர். அதற்கு பதிலாக அமைந்தது தான் அந்த தன்னிலை விளக்கம், பாலுறவு சிக்கல் பற்றி, முழுமையாக, அதன் வகை, தன்மை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். பிரச்சனை எப்போது ஏற்பட்டது? எல்லா நாட்களிலும் உள்ளதா? எப்போது கூடுதலாக உள்ளது? முன்பு எப்படி இருந்தது? இது பற்றி துணைவியின் அபிப்ராயம் என்ன? என்பது பற்றி அறிவது அவசியம்.
பெண்களோடு பேசும் போது, ஒரு பெண் உதவியாளரை வைத்துக் கொள்வது நல்லது. திருச்சியைச் சேர்ந்த ஒரு மனநல மருத்துவர், தன்னிடம் சிகிச்சைக்கு வரும் இளம்பெண்களிடம் தவறாக நடந்து கொள்வதாக ஒரு பிரச்சனை எழுந்தது. என்னிடம் ஆலோசனைக்காக அழைத்து வரப்பட்ட ஒரு புதுமணப் பெண் தன்னை இவ்வாறு பலாத்காரம் செய்து உடல் உறவு சுமுகமாக இருக்க என்ன செய்வது, எப்படி செய்வது? என்பதைச் சொல்லித் தருவதாக கூறி பின்பு மயக்க மருந்து கொடுத்து தவறாக முயற்சி செய்ததாகக் கூறினார். மயக்க மருந்து கொடுக்கும் நிபுணர்கள் மீதும் இப்படி ஒரு குற்றச்சாட்டு கூறுவதுண்டு. எனவே மனநல ஆலோசகர்கள், தங்களோடு ஒரு பெண் உதவியாளரை வைத்துக் கொள்வது பிரச்சனைகளைத் தவிர்க்க உதவும்.
வங்கி ஒன்றில் பணிபுரியும் கணேஷ் தன்னால் முன்பு போல உடல் உறவில் முழுமையாக ஈடுபட முடியவில்லை என்றும், விறைப்பில்லாமையுடன், பெண் உறுப்புக்குள் செலுத்த இயலாமையும் உள்ளது என்றும் வேதனைப்பட்டார். இதற்கான காரணத்தை அறிய அவரது மனைவியிடம் கலந்து ஆலோசித்த போதும் சரியான தெளிவு கிடைத்தது. வீட்டில் ஒரு பிரச்சனை காரணமாக அவர்கள் வெளியேறி, வேறு ஒரு வீட்டிற்கு சென்றனர். அங்கு பூரணமான தனிமையான இட வசதி இல்லை. பல குடுத் தனங்கள் உள்ள வீடு. அங்கே உடல் உறவு கொள்ள போதுமான பாதுகாப்பு இல்லை என்கிற ஒரு பயம் கணேஷ்க்கு ஏற்பட்டது. யாராவது பார்ப்பார் களோ, வந்து விடுவார்களோ என்கிற பயம் வாட்டியது. பக்கத்து போர்ஷன்காரர்கள் வெளியே
சென்றிருந்தாலும் கூட, அவர்கள் எப்போது திரும்பி வந்து கதவைத் தட்டுவார்களோ... என்கிற பதைபதைப்பு வாட்டும். இதனால் ஏற்பட்ட மனத்தடை, திரும்பவும் தனது சொந்த வீட்டிற்கு சென்ற பிறகும் தொடர்ந்தது. மன அமைதிப் பயிற்சியை அளித்து அவரை பழைய நிலைக்குத் திருப்பினேன். ஓரினச்சேர்க்கை, சுய பாலின்பச் செயல், இரவில் விந்து வெளியேறுவது போன்ற பிரச்சனை களுக்கு ஆலோசனைகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இச்செயல் களால் ஏற்படும் மனப் போராட்டங்கள், குற்ற உணர்வுகள் களையப்பட முறையான சைக்கோ தெரபி தேவைப்படுகிறது.

-டாக்டர்.ஜி.ராஜமோகன் Ph.d.,M.A(Phy)
வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது .
உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!!
ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.
0 comments:
Post a Comment