Thursday, July 12, 2012

மாடல் பிளாட்டைக்(Apartment) கண்டு ஏமாறாதீர்கள்!

குடியிருக்க சொந்தமாய் ஒரு வீடு வேண்டும் என்பது நடுத்தர வர்க்கத்தினரின் கனவு. அந்த வீட்டினை தனியாக கட்டலாமா? அடுக்குமாடி குடியிருப்பில் வாங்கலாமா என்பதுதான் பலரின் யோசனை. மாடல் ஃபிளாட் பார்த்து பணம் அட்வான்ஸ் கொடுக்கும் பலரும் வீடு முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்ட உடன் அதை பார்த்து ஏமாற்றமடைகின்றனர். ஏனெனில் மாடல் வீட்டில் போடப்பட்டிருந்த டைல்ஸ், அறையின் உயரம், அதில் பயன்படுத்தியிருந்த பொருட்கள் ஒன்றுகூட புதுவீட்டில் பயன்படுத்தப்படுத்தப்பட்டிருக்காது என்பதுதான் அதிர்ச்சிகரமான உண்மை.

அடுக்குமாடி குடியிருப்பில் வீடுவாங்குபவர்கள் விழிப்புணர்வோடு இல்லாவிட்டால் பணத்தையும் இழந்து தரமற்ற வீடுகளை வாங்க நேரிடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். வீடுவாங்குபவர்களுக்காகவும், ஏமாற்றும் பில்டர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதற்காகவும் நிபுணர்கள் கூறும் ஆலோசனையை படியுங்களேன்.

மத்திய தர வர்க்கத்தினருக்கு ரெகுலர் இன்கம் வரவேண்டுமென்றால் ப்ளாட்டிலும்., நீண்டகால முதலீடு என்றால் இடத்திலும் முதலீடு செய்யலாம். புறநகர்ப்பகுதிகளில் இடங்களில் முதலீடு செய்தால் அது ஆக்கிரமிக்கப்படலம். பின் ஆக்கிரமிப்பாளர்களைக் காலி செய்ய வைக்க வேறு பணம் தேவைப்படும். எனவே ப்ளாட்டுக்களில் செய்யும் முதலீடு அதிக சிக்கலில்லாதது.

பொதுவாக வீட்டு வசதித்துறையின் மூலம் வாங்கும் வீடும் இடமும் கூட பாதுகாப்பானது. எல்லா சர்டிஃபிகேட்டுகளும் முறையாக இருக்கும். விற்கும் போதும் அந்த சேல் டீட்., பட்டா., அது சம்பந்தப்பட்ட பேப்பர்கள் கட்டாயம் கிடைப்பதால் மிக எளிது. ப்ளூ பிரிண்ட் படி வீடு இருக்கும்.

தனியார் பில்டர்களிடம் ஃப்ளாட் வாங்கினால் எல்லாமே பக்காவான டாக்குமென்டில் எழுதி அக்ரிமென்ட் போட்டுக்கொள்வது நல்லது. ஃப்ளாட்டின் மாதிரி வடிவத்தில் இருப்பதுபோல் வீடு கட்டுகிறார்களா என்று ஒன்றுக்கு இரண்டுமுறை சென்று பார்த்து வருவது நல்லது. ஏனெனில் மாடல் வீட்டில் பயன்படுத்திய பொருட்கள் ஒருமாதிரியாகவும், கட்டும் வீடுகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் வேறொருமாதிரியாகவும் இருக்கும். மாடல் வீட்டை இடித்து தரைமட்டமாக்கிவிட்டால் நம்மிடம் எந்த வித ஆதாரமும் இருக்காது.

ஃப்ளாட்டின் வெளித்தோற்றம், உள் அலங்காரம் வடிவமைப்பு போன்றவை மாடல் வீடுகளில் இருப்பது போல அமைத்து தருவார்களா என்பதை அக்ரிமென்டில் உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது. அதேபோல் மாடல் வீடுகளில் இருப்பதைப் போல விசாலமான அறை, சீலிங் அளவு போன்றவை சரியான அளவில் கட்டப்படுகிறதா, பயன்படுத்தப்படும் பொருட்கள் தரமானவையாக இருக்கின்றனவா என்பதை கவனிக்க வேண்டியது அவசியம்.

வீடு அல்லது ப்ளாட்டாக வாங்கும் போது அந்த ப்ரமோட்டர்கள் முன் அனுபவம் உள்ளவர்களா., முன் உள்ள ஸ்கீமை வெற்றிகரமாக முடித்திருக்கிறார்களா. சொன்ன தேதியில் கட்டி முடிப்பார்களா. எனத் தெரிந்து முதலீடு செய்வது உத்தமம். பில்டர்களின் பான்கார்டு, வரிவிபரம் போன்றவைகளை தெரிந்து கொள்வது நல்லது. இல்லையெனில் பில்டர் ஏதாவது சிக்கலில் மாட்டினால் நடப்பு திட்டமும் முடக்கப்படுவதோடு நம்முடைய பணமும் சிக்கலில் மாட்டிவிடும்.

வங்கி லோன்., கையிருப்பு., நகை ., டெப்பாசிட்டுகள் எல்லாவற்றையும் போட்டு முதலீடு செய்து குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் நம் கையில் வீடு கிடைக்கா விட்டால் வாடகை வீட்டுக்கான வாடகை வேறு நம் கையைக் கடிக்கும். எனவே ப்ரமோட்டர் அல்லது பில்டர்களின் முன் அனுபவமும் முக்கியம்.

சில பில்டர்கள் ஜிம்., ஸ்விம்மிங் க்ளப்., கார்பார்க்கிங் எல்லாம் இருக்கிறது என சொல்லி விளம்பரப்படுத்துவார்கள் பின்பு கார் பார்க்கிங், அது, இது என சார்ஜ் செய்வார்கள். இதைத்தவிர்க்க உங்களுக்கு என்னென்ன வசதிகள் செய்து தரப்படும் என்பதை நீங்கள் எழுத்துபூர்வமாக முன்பே உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

மத்திய தர மக்களும் தங்கள் பணத்துக்கு சரியான பில்டர்களை அணுகி இடம் வீட்டில் முதலீடு செய்யலாம். நகரின் சில இடங்களிலும் நல்ல வீடுகள் சரியான விலைக்கு தரமான பில்டர்களால் கட்டித்தரப்படுகிறது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம். சரியான பில்டர்களை அணுகி உங்கள் கனவு இல்லத்தை அமைத்துக் கொள்வதுதான். அதுக்கு நீங்க உங்ககிட்ட ரேஷன் கார்டு., ட்ரைவிங் லைசன்ஸ்., பான் கார்டு போன்ற ஐடி ப்ரூஃபை வைத்திருக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
நன்றி :oneindia(goodreturns)
(மயூரா அகிலன்)
வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது . உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!! ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.


0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls