Friday, July 13, 2012

மாணவர்களே !உங்களுக்கேற்ற துணியை தேர்ந்தெடுக்க தயங்காதீர்கள் ?

மாணவர்களுக்கான சில முக்கிய ஆலோசனைகள் :

விருப்பமான துறையை தேர்ந்தெடுப்பது, தனிப்பட்ட அவரது சுயமுடிவாக இருக்க வேண்டும். வற்புறுத்தல்கள் மற்றும் நெருக்கடிகள் மாணவரை குழப்பத்திலும், வெறுப்பிலும் ஆழ்த்திவிடக்கூடாது.

தனது ஆர்வம், திறன்கள், தகுதிகள், ஆற்றல்கள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே சரியான இலக்கை தேர்வு செய்யவேண்டும்.
விஞ்ஞானியாக, மருத்துவராக, பேராசிரியராக, சினிமா இயக்குனராக, தொழிலதிபராக, பெரிய அரசு அதிகாரியாக, தொல்பொருள் நிபுணராக, தத்துவஞானியாக, இசை கலைஞராக, அரசியல்வாதியாக என்று பல நிலைகளில் மாணவர்களுக்கு கனவுகள் உண்டு. ""கனவுகள் இல்லாதவரிடத்தில் பெரிதாக எதுவும் இருக்காது'' என்று ஒரு சீன பழமொழி உண்டு.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் வரலாறுகளை படித்து, அந்த வெற்றிக்கான காரணியை ஆராய்ந்தால் அதற்கான அடிப்படையாக இருந்தது லட்சியம் என்பது தெளிவாக தெரியவரும். லட்சியம் உங்களின் செயல்களை தீர்மானிக்கும்.

உங்களின் கனவை நனவாக்க வேண்டுமெனில், உங்களுக்கு ஏற்ற எதிர்கால துறையை முடிந்தளவு விரைவாக தேர்வுசெய்ய வேண்டும்.

விருப்ப வாய்ப்புகளைப் பற்றி அறிந்துகொள்ள அதுசம்பந்தமான செய்தித்தாள்கள், பத்திரிகைகள், இணையதளம் ஆகியவற்றை பயன்படுத்துவதுடன், பெற்றோர்கள், ஆசிரியர்கள், தொழில் ஆலோசகர்கள், தொழில்துறை பற்றி பரவலான அறிவுடைய நபர்கள் ஆகியோருடன் இதுசம்பந்தமாக கலந்துரையாடலாம். இறுதி முடிவை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

உங்களை முதலில் நீங்கள் புரிந்துகொள்வதால் மட்டுமே எதிர்கால துறையை நீங்கள் சரியாக முடிவுசெய்ய முடியும். உங்களின் இயல்பான ஆர்வம், திறமை ஆகியவைப் பற்றி தெளிவான புரிதல் இருக்க வேண்டும். உங்களின் திறமை, ஆற்றல், குணாதிசயம், ஆர்வம் ஆகியவற்றை நீங்கள் அறிந்துகொள்ளும் முயற்சியில் நீங்கள் மிதமிஞ்சிய கற்பனையின்றி மிக சரியான புரிதலை கொண்டிருந்தால் மட்டுமே தெளிவான முடிவு கிடைக்கும்.

உங்களின் எதிர்கால தொழில் துறைக்கு தேவையான புதிய திறன்களை வளர்த்துக்கொள்வதும் மிகவும் முக்கியம்.

மாறி வரும் இன்றைய உலகிற்கு ஏற்ப உங்களது லட்சியத்தை உரிய காலகட்டத்தில் மறுஆய்வு செய்து, அதற்கான தகுதிகளை மேம்படுத்திகொள்ள வேண்டும்.

அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

நன்றி :தினமலர்
வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது . உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!! ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.


0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls