Friday, July 13, 2012

நிதித்துறை சார்ந்த படிப்புகள் மற்றும் பணிவாய்ப்புகள்

நிதித்துறைப் படிப்புகளுக்கு, வேலை வாய்ப்பு சந்தையில் எப்போதுமே ஒரு தனி மவுசு உண்டு. எனவே, அப்படிப்புகள் மற்றும் அதுசார்ந்த தொழில்களை மேற்கொள்ளும் முறைகள் பற்றி தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

நிதி மேலாண்மை
நிதி மேலாண்மைத் துறையைப் பொறுத்தவரை, பலவிதமான படிப்புகள் உள்ளன. Chartered Financial Analysis, Chartered Accountancy, Cost & Management Accountancy, Certified Treasury Manager course, Certified Public Accountant course, Certified Investment Banker course and Certified Risk and Insurance management course போன்ற பலவிதமான படிப்புகள் அவற்றில் அடங்கும். இவற்றில் ஏதாவது ஒரு படிப்பில் சேர வேண்டுமானால், காமர்ஸ் அல்லது எகனாமிக் படிப்பில் நீங்கள் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

எம்.பி.ஏ., பைனான்ஸ்
ஒரு மாணவர் எந்தப் பிரிவில் பட்டம் பெற்றிருந்தாலும்,
இந்தப் படிப்பில் சேரும் தகுதியை அவர் பெறுகிறார். எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. பணி அனுபவம் உள்ள நபர்களுக்கு, சில கல்வி நிறுவனங்கள், எக்சிகியூடிவ் எம்.பி.ஏ படிப்பை வழங்குகின்றன.

அக்கவுண்டிங்
அக்கவுண்டிங் துறையில் உங்களின் தொழிலை அமைத்துக்கொள்ள வேண்டுமெனில், நீங்கள் பள்ளி மேல்நிலைப் படிப்பில், வணிகவியலை முக்கியப் பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும். மேலும், வணிகவியலில், இளநிலைப் பட்டப் படிப்பை(B.Com) முடித்திருக்க வேண்டும். எம்.காம். போன்ற படிப்புகளை மேற்கொள்ள இந்த பி.காம் படிப்பு முக்கியம். மற்றபடி, இத்துறையில் ஓரளவு கணினி அறிவும் அவசியம்.

சார்டர்ட் அக்கவுண்டன்சி
CA படிப்பின், CPT எனப்படும் Common Proficiency Test -க்கு, நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட முறையில் 10ம் வகுப்புத் தேர்வை முடித்தவுடன் பதிவு செய்து கொள்ளலாம். ஆனால், உங்களின் 12ம் வகுப்பு படிப்பை முடித்தப் பிறகுதான் அந்த தேர்வை எழுத முடியும். 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்கு காத்திருக்கும்போதே கூட CPT தேர்வை எழுதலாம்.

அதேசமயத்தில், 50% மதிப்பெண்களுக்கு மேலாக பெற்றிருக்கும் வணிக பட்டதாரிகள், வணிகமல்லாத, அதேநேரத்தில், கணிதம் தவிர்த்த வேறு பட்டப்படிப்பை முடித்து, குறைந்தபட்சம் 55%(aggregate) மதிப்பெண் பெற்றவர்கள், வணிகமற்ற, ஆனால் கணிதத்துடன் கூடிய பட்டப்படிப்பை முடித்து, குறைந்தபட்சம் 60%(aggregate) பெற்றவர்கள், CPT தேர்வை எழுத வேண்டாம். அவர்கள், Professional Competence Course(IPCC) -க்கு பதிவுசெய்ய வேண்டும்.
Institute of Cost & Works Accountants of India(ICWAI) அல்லது Institute of Company Secretaries of India(ICSI) நடத்தும் இறுதித் தேர்வில் தேறியவர்களும், IPCC படிப்புக்கு பதிவு செய்யலாம்.

நீங்கள் IPCC தேர்வை தேறிய பின்பு, நடைமுறைப் பயிற்சிக்கான Articled clerk என்பதாக நீங்கள் பதிவு செய்ய முடியும். அதன்பிறகு, Chartered Accountancy -ன் இறுதி படிப்பிலும் நீங்கள் இடம்பெற முடியும்.

வங்கியியல்(Banking)
பள்ளி மேல்நிலைப் படிப்பை எந்தப் பிரிவில் முடித்திருந்தாலும், ஒருவர் வங்கியியல் துறைக்கு செல்ல முடியும். அதேநேரத்தில், வணிகவியல், பொருளியல் மற்றும் கணிதம் ஆகியவற்றைப் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை உண்டு.
முதுநிலைப் படிப்புகளுக்கு, Chartered Accountants, Chartered Financial Analysts மற்றும் எம்.பி.ஏ படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

நன்றி :கல்விமலர்
வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது . உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!! ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.


0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls