Tuesday, November 19, 2013

அரிக்கன் விளக்கு

பல மேதைகளின் வாழ்வில் ஒளியேற்றிய அரிக்கன் விளக்கு இன்று என் நினைவோட்டத்தில்...

முன்பெல்லாம் இந்த அரிக்கன் விளக்கு இல்லாத வீடே இருக்க முடியாது. ஏழை பணக்காரன் என்று வித்தியாசம் பாராமல் அனைவரது வீட்டிலும் சிமிலி விளக்கோடு இந்த அரிக்கன் விளக்கும் நிச்சயம் இருக்கும்.முன்பெல்லாம் இரவு நேர வருவதற்குள் சமைத்து முடித்து விடுவார்கள்.பிறகு சிமிலி விளக்கின் துணைகொண்டு சாப்பிட்டு நேரத்தோடு உறங்கிவிடுவார்கள். காரணம் இருளின் ஆக்கிரமிப்பு அதோடு பேய் பிசாசின் நம்பிக்கையாலும்.பெரும்பாலும் வீட்டினுள் சிமிலி விளக்கையும் வெளியில் அதாவது கழனிக்கு நீர் பாய்ச்சவோ வெளியில் செல்லவோ இந்த அரிக்கன் விளக்கை பயன் படுத்துவார்கள். ஏனென்றால் காற்றடித்தாலும் இந்த விளக்கு அணையாது என்பதால். அதன் மேலே உள்ள கண்ணாடி கிளாஸ் காற்றை உள்ளே புகவிடாமல் பார்த்துகொள்ளும். இதனை பத்த வைக்க மேல மூடி போல உள்ளதை சற்று உயர்த்தி கீழே கண்ணாடியை சாய்வாக சாய்த்தால் உள்ளே உள்ள திரி எட்டிவிடும். எளிதாக பற்ற வைத்து விடலாம். தேவைக்கு ஏற்றவாறு ஒளியின் அளவை மேனுவலாக மாற்றி பயன்படுத்தலாம். மண்ணெண்ணெய்/சீமெண்ணெய் ஊற்றி பயன்படுத்துவார்கள். பலரது வீட்டில் நினைவு பொருளாக இன்றும் இருக்குமென்று நம்பகிறேன்.
வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது . உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!! ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.


0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls