Friday, November 22, 2013

தட்டான்(Dragonfly) பூச்சிகளின் நினைவு...


சிறு வயதிலே பாவத்தை சுமக்க தொடங்கியவன் நான்...

வண்ணத்துப் பூச்சிகளுக்கு அடுத்து பல வண்ணங்களில் மனதுக்கு இதமாக காட்சி தருவது தட்டான்கள் என்றால் அது மிகையல்ல.தட்டானை சில பகுதிகளில் தும்பி என்று அழைப்பார்கள். சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள், நீலம், கருப்பு, பச்சை என பல்வேறு நிறங்களில் அழகாக இருக்கும். சிறு வயதிலே பாவத்தை சுமக்க தொடங்கியவன். பெரும்பாலும் சிகப்பு வண்ணத்தில் கொடியில் துணி தொங்குவது போல் வேலியில் தொங்கும்  தட்டான்கள்  எளிதில் என்னிடம் சிக்கி விடும். அந்த தட்டான்களை  அவை அயர்ந்த நேரத்தில் பக்கவாட்டில் ரெக்கையை பார்த்து பிடித்துவிடுவேன். அதில் யானை தட்டானை பிடிப்பது ரொம்ப கஷ்டம் எப்பவுமே உஷாரா இருக்கும் பின்னாடி இருந்து மறைமுகமாக அதனை ஏமாற்றி வாலை தான் பிடிக்க முடியும், பிடித்த வேகத்தில் கையில் கடிக்கும் பாருங்க அம்மாமா அப்படி வலிக்கும். இது அதிக உயரத்தில் பறக்காது.பார்க்க குட்டி ஹெலிகாப்டர் போல இருக்கும்.

அப்படி பிடிக்கப்பட்ட தட்டான்களை வாலில் நூலை கட்டி பறக்கவிடுவது சில நேரம் நூல் கட்டும் பொது வாழ் பிஞ்சி சில நேரம் தலை முண்டமாக்கப்ட்ட கொடுமை ஏற்பட்டுவிடும், அதுமட்டுமல்லாமல் ரெக்கையின் பாதியை பிய்த்து குட்டிகரணம் போட வைப்பது போன்ற கொடுமைகளை செய்து ரசித்தவ்னில் நானும் ஒருவன். . இன்னும் பிற தொல்லைகளை அந்த சிறு பூச்சியிடம் கட்டினாலும், அதனுடைய தோற்றத்திலும் வண்ணத்திலும் மனதை பறிகொடுத்து, அதனை பிடித்து விளையாடுவது என்பது தனி சுகம். ஆனால் தற்போது வருந்துகிறேன்.

சரி இந்த தட்டான் பூச்சிகளின் வாழ்கையை பார்ப்போம்...

பறக்கும் பிரிவில் உள்ளடங்கிய தட்டான் பூச்சிகள் இரு பிரிவுகளாக உலகம் முழுக்க சுமார் 6000 வகைகள் உள்ளன. இந்தியாவில் மட்டும் சுமார் 500 வகைகள் உள்ளன. மழை, குளிர் காலங்களில் அதிக அளவில் தட்டான்களை காணலாம்.

தட்டான் பூச்சிகள் சராசரியாக (Dragonfly) 4 அங்குல நீளம் இருக்கும். அதிகபட்சமாக 6 அங்குல நீளம் இருக்கும். ஊசித் தட்டான்கள் (Damselfly) அதிகபட்சமாக 3 அங்குல நீளம் இருக்கும். தங்கத் தட்டான் வகை (Golden Ringed Dragonfly) 8,000 அடி உயரத்திலும் வாழக்கூடிய தன்மை வாய்ந்தது. சிவப்பு மற்றும் கருப்பு நிறத் தட்டான்கள் வெப்ப நாடுகளில் மட்டும் வாழ்கின்றது. தட்டான்கள் பறவையினமாக அறிப்பட்டாலும், பிரிவு பூச்சி வகையில் Anisoplera வகையில் அடங்கும்.

தட்டான்கள் பார்ப்பதற்கு ஒன்று போலவே இருந்தாலும், நெருங்கி பார்த்தால், தட்டான்களுக்கு தலையுடன் ஒட்டிய விளக்குகளைப் போன்ற நல்லா பார்க்கும் திறன் கொண்ட கண்கள் இருக்கின்றது. ஊசித்தட்டான்  கண்கள் சற்று அகன்றிருக்கும் . தட்டான் மற்றும் ஊசித்தட்டான்களுக்கு 6 கால்கள் இருக்கும். இவை அதனுடைய உணவை பிடிப்பதிலும், அமர்வதிலும் மட்டும் பங்கு வகிக்கின்றன. தட்டான்யின் கண்களில் சுமார் 30,000 விழியாடிகள் உள்ளன .

தட்டான்கள் சராசரியாக மணிக்கு 30 கி.மீ வேகத்தில் பறக்கின்றன. தனக்கான உணவை பிடிக்கும் போது 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பறந்தடிக்கும் என்பது ஆச்சர்யமான உண்மை. தட்டான்கள் தன் உடம்பின் இரு பக்கங்களிலும் பக்கவாட்டில் விரைப்பான அகன்ற 4 இறகுகளைக் கொண்டவை. ஊசித்தட்டான் தன் உடலின் மேல் பக்கத்தில் பின் நோக்கிய சிறகுகளைக் கொண்டிருக்கும்.

தட்டான்கள் காற்றில் ஏற்படும் அசைவுகள், மாற்றங்களை பறக்கும் நிலையிலும் தனது உடல் ரோமங்களால் துல்லியமாக அறிந்து கொள்ளும். காற்றில் எளிதில் இயங்கக் கூடியதும், அம்பை போல் எய்யப்படும் திறனுடையதாலும் தனக்கான உணவை சுலபமாக பெற்றுவிடுகிறது. பெரிய தாடைகளால் எளிதாக பூச்சிகளை வேட்டையாட முடிகிறது.

ஆம். புலி , சிறுத்தை, சிங்கம் போன்று தட்டான்யும் ஒரு இரைகொல்லியாகும். இது பறக்கும் நிலையிலேயே தன் உணவை வீழ்த்தும் திறமை படைத்தது. தட்டான்கள் - சிறு பட்டாம்பூச்சி வண்டு, கொசு, அந்துப்பூச்சி மற்றும் சிறு தட்டான்கள் ஆகியவற்றை உணவாக உட்கொள்கிறது. தட்டான்கள் ஒரு தன்னின உண்ணிகளாகும். தட்டான்கள் தமது தனித்த இரத்த குழாய் நாளங்கள் மூலம் மேல் நோக்கி எழவும், முன்நோக்கி செல்லவும் முடிகிறது.

இயல்பாக சிவப்பு நிறம் கொண்ட தட்டான் அதே நிற தட்டான்யுடன் இணை சேரும். அபூர்வமாக சில வேளைகளில் மற்ற இனத் தட்டான்களுடன் இணை சேர்வதும் உண்டு, ஊசித் தட்டான்களுக்கு மற்ற இன ஊசித் தட்டான்களுடன் இணை சேரும்.

தட்டான்கள் மற்றும் ஊசித்தட்டான்கள் இணைசேர்வது இயற்கையின் அதிசய நிகழ்வாகும். பெண் தட்டான் ஒரு புல்லின் நுனியை தன் கால்களால் இறுக பற்றிக் கொள்ள, அதன் வாயின் அடிப்பகுதி, ஆண் தட்டான்யின் கழுத்தை இறுகப் பற்றிக் கொள்கிறது. ஆண் தட்டான் தன் வாலின் கடைசிப் பகுதியை பெண் தட்டான்யின் அடிவயிற்றில் பதித்து இணை சேர்கிறது. நீர்நிலையை ஒட்டி பறந்து செல்லும் போது, வாலின் அடிப்பகுதியை நீரில் தொட்டு, முட்டை விட்டு செல்லும். முட்டைகள் நீரில் மூழ்கி அடிப்பகுதில் தங்குகிறது.

நீரின் அடியில் உள்ள முட்டைகள் பொரிந்தவுடன் மீன்களைப் போல் செவுள்களின் மூலம் மூச்சுவிடுகிறது. குஞ்சுத் தட்டான் (Nymph) 12முதல் 15முறை தோலுரிந்து முழு வளர்ச்சிடைந்து நீரிலிருந்து வெளியேறும்.

பாலித்தீவிலும், அந்தோனேசியாவிலும் தட்டான்களை மக்கள் உணவாக உட்கொள்ளும் பழக்கம் உள்ளது. கரிச்சான், நாகணவாய், பஞ்ருட்டான் போன்ற பறவை இனங்களுக்கு தட்டான்களே முக்கிய உணவாகும்.

பூச்சியினங்கள் அதிக அளவில் பெருகிவிடாமல் சமன் நிலையில் வைத்திட பறவைகளோடு தட்டான்களின் பங்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இயற்கை சுழற்சியில் தட்டான்கள் சுற்றுச் சுழலுக்கு பெரிய அளவில் நன்மை செய்கின்றன.

பூச்சிகளை தொடந்துதான் உணவாக்கிட தாமே பல பறவை இனங்களுக்கு உணவாக அமைந்து சூழலியல் சமன்பாட்டில் தட்டான்கள் முக்கிய பங்காற்றுகிறது.

வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது . உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!! ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.


4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தட்டான் பூச்சிகள் பற்றிய தகவலுக்கு நன்றிங்க...

Unknown said...

அற்புதமான பதிவு.. இந்த பதிவை படித்து முடிக்கும் வரை நானும் எனது பழைய நினைவுகளுடன் மூழ்கிப்போனேன்.மீண்டும் கிடைக்காத அரிய காலம்(பிள்ளைபருவம்)

சாரதி said...

இன்றைக்கு தொலைந்து போன தட்டான்களை பற்றி குழந்தைகளுக்கு கதை சொல்ல ஒரு அருமையான பதிவு

Unknown said...

என் சிறு வயது நினைவுகளை ஞாபகப்படுத்துகின்றன அருமை அண்ணா👌👌👌

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls