Thursday, December 12, 2013

ரஜினி என்ற காந்தத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் - 12-12-2013


முழுக்க முழுக்க எனது தனிப்பட்ட பிறந்தநாள் பதிவுதான் இது.

சிலருக்கு இவரை பிடிக்காமல் கூட இருக்கலாம் ஆனால் நான் சிறு வயதில் இருந்தே இவரின் நடிப்பை ரசித்தவன். எனக்கு பிடித்த பொழுதுபோக்கு கலைஞர்களில் ஒருவரனான ரஜினிகாந்த்தை வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

வந்தேறிகள் நாட்டை ஆள்வதும், கூத்தாடி நாட்டை ஆள்வதும் வழக்கமாக கொண்டுள்ள தமிழகத்தில் வாய்ப்புகள் பலமுறை கதவை தட்டியும் துளியும் பதவி சுகமில்லாமல் புறந்தள்ளிய தெளிவான சிந்தனை கொண்ட உன்னை வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

ஒரு வேளை உன்னால் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது உன்னை தூற்ற நேரிட்டாலும் உன்னால் ஒரு பாதிப்பும் அடையாத நானும் என் குடும்பாரும் உன்னை வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

தனிப்பட்ட முறையில் அவர் நல்லவரா கெட்டவரா என்பது எனக்கு தெரியாது தெரிந்துகொள்ளவும் விரும்பவில்லை . ஒரு நடிகனின் ரசிகன் என்ற முறையில் அவரை பிடிக்கும். எனக்கு பிடித்த ஒரு நடிகனான மனிதனுக்கு வாழ்த்து சொல்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.

ரசிகன் என்பதற்காக நான் அவருக்கு பாலபிசேகம் , அவரை பின்தொடர்வதும் ஒருபோதும் இல்லை. நான் கொடுக்கும் 100 ரூபாய்க்கு எனக்கு பொழுதுபோக்காக இருக்குமென்றால் அது ரஜினி என்றில்லை யார் நடித்தாலும் அவரை பிடிக்கும் . இதையெல்லாம் விட சென்ற வருட நிகழ்வு என்னை அவர் மீது மேலும் ஈர்ப்பு கொள்ள வைத்துவிட்டது.

சென்ற வருடம் மருத்துவர் அய்யா அவர்கள் ரஜினிகாந்த்தை தனிப்பட்ட முறையிலோ, உள்நோக்கத்துடனோ எதிர்க்கவில்லை. ஒரு நியாயமான நோக்கத்திற்காக, ரஜினிகாந்த் எதிர்க்கவே முடியாதவர் என்று கருதப்பட்ட நேரத்தில், இதற்காக பலராலும் தூற்றப்படுவோம் என்று தெரிந்தும் மருத்துவர் அய்யா ரஜினிகாந்த் புகைபிடிக்கும் காட்சிகளை எதிர்த்தார். அன்று பலரும் மருத்துவர் அய்யாவுக்கு ஏன் இந்த வேலை என்று கேட்டனர். அந்தக் கேள்விக்கு ரஜினிகாந்த் அவர்களே புகையிலை பழக்கத்தை விடுத்து பதில் சொல்லிவிட்டார்.
      

                                                                                     பசுமை தாயகத்தின் சார்பாக நன்றி தெரிவித்த சுவரொட்டி
http://pasumaithaayagam.in/about-us.html
தவறான நிலைபாடுகளில் வீம்பாக இருக்கும் சராசரி மனிதர்களைப் போன்று இல்லாமல் தவறுதான் என தன்னைத் திருத்திக்கொண்டு, தவறு செய்யவேண்டாம் என அடுத்தவருக்கும் போதிக்கும் ரஜினிகாந்தின் பெருந்தன்மைக்காகவும், தன்னிலை மாற்றத்திற்கு முழு காரணமான மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு மனதார நன்றி தெரிவித்த பெருந்தன்மைகாகவும், தன்னலதோடு தன்னை சார்ந்த ரசிகர்களின் நலனையும் கருத்தில் கொண்டு புகைப்பழக்கதை விட சொல்லி கேட்டுக்கொண்ட பெருந்தன்மைக்காகவும் , ஒருகாலத்தில் புகைபிடிப்பதை ஒரு ஸ்டைலாக அறிமுகப்படுத்திய ரஜினிகாந்த இன்று புகைபிடிப்பதைக் கைவிடுவதற்கான அடையாள மனிதராக திகழும் நல்ல மனிதரை வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-தஞ்சை தேவா
வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது . உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!! ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.


1 comments:

ashokromans said...

very touching article

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls