Tuesday, December 10, 2013

கேட்பாரற்றுக் கிடக்கும் சுண்டைக்காய்?

எங்க வீட்டு பின்புறம் யாருடைய தயவின்றி தானே வளர்ந்து எங்கள் மொத்த குடும்பத்திற்கும் பயனாகும் இந்த சுண்டைகாய் பலர் வீட்டுத் தோட்டங்களிலும் கேட்பாரற்றுக் கிடக்கிறது. இந்த சுண்டைக்காயை பலரும் விரும்ப மாட்டார்கள். ஏனெனில் அதிலுள்ள மருத்துவக் குணங்கள், தீரும் நோய்கள் பற்றி நம்மில் பலருக்குத் தொரிவதில்லை.

சுண்டைக்காயின் நற்குணங்களை பற்றி நீங்கள் தொரிந்து கொண்டால் இச்சிறியக் காயில் இத்தனை பயன்-களா என வியந்து போவீர்கள்.

சுண்டைக்காயை உடைத்து போதிய அளவு தயிர்ல் இட்டு உப்புச் சேர்த்து வெயிலில் நன்கு காயவைத்து சுண்டைக்காய் வற்றல் தயார் செய்யலாம். இதை நல்லெண்ணையில் பொரித்து குழம்பிலிட்டு சாப்பிட்டு வர வயிறு சம்பந்தமான நோய்கள் குணமாகும். வற்றலாகப் போடுவதை விட பச்சை சுண்டைக்காயை அப்படியே பயன்படுத்துவதே சிறந்தது.

நீராகப் போகும் பேதியைக் கட்டுப்படுத்தவும். அஜீரண்க் கோளாறுகளை போக்கவும் சுண்டைக்காய் நல்ல மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது.

இது இரத்தத்தில் கலக்கும் தொற்று நோய்க்கிருமிகளை அழிக்கும் திறன் வாய்ந்தது.

இது கபத்தை உடைத்து வெளியேற்றும். மலக்கிருமிகளைக் கொன்று மலத்துடன் வெளியேற்றி விடும். வாதநோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.

இழுப்பு, இருமல், காசம் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் சுண்டைக்காய்க்கு உண்டு.

இது மார்பு சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்த வல்லது. மூலச்சூட்டை வரவிடாமல் தடுக்கும் சிறந்த மருந்தாகும்.

ஆசனவாய்க் கடுப்பு, பூச்சிகளினால் உண்டாகும் வயிற்றுக் கடுப்பைப் போக்கும் திறன் இதற்கு உண்டு.

உஷ்ண பேதி உள்ளவர்கள் சுண்டைக்காயைப் பயன்படுத்தி வர நல்ல பலன் கிடைக்கும்.

சுண்டைக்காயினால் பித்தம், மயக்கம், பித்த்வாந்தி, தலைவலி, வயிறு உப்புசம் போன்ற நோய்கள் விரைவில் குணமடையும்.

தோல் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் சுண்டைக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நோய்கள் விரைவில் குணமாகி தோல் பளபளப்பாகும்.

சுண்டைக்காயை அடிக்கடி உண்வில் சேர்த்து வர நரம்புகள் வலுப்படும்.

புழுக்கள் வெளிப்பட, நீரிழிவு நோயாளிகளுக்கு, எலும்புகள் வளர்ச்சி பெற, வாயுத் தொல்லை நீங்க, வாதநோய்கள் குணமாக , பல் நோய்களுக்கு, சுண்டைக்காயை வளரும் குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுத்து வந்தால் இரத்தசோகை, காமாலை நோய்கள் வராமல் பாதுகாக்கலாம்..
வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது . உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!! ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.


0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls