Thursday, December 26, 2013

அந்த மூன்று நாட்கள்!!!

வாழ்க்கை பயணத்தில் அம்மாவாய்,சகோதரியாய், மனைவியாய், மகளாய் பங்கேற்கும் பெண்களின் புரிந்து கொள்ளப்படாத பிரச்சனையான "மாதவிடாய்" பற்றிய தெளிவான எண்ணங்களை ஆண்களிடத்திலும், அறியா மக்களிடத்திலும் கொண்டு சேர்க்க இந்த பதிவை இங்கே உங்களிடத்தில் பதிகிறேன்.

நான் சிறியவனாக இருந்த போது ஒரு நாள் துவக்கப்பள்ளி முடிந்து வீட்டிற்கும் வந்ததேன். வீட்டில் ஒரே கூட்டம் எனக்கு என்னவென்று புரியவில்லை. கொல்லைபுறத்தில் எனது சகோதரி மட்டும் அழுகொண்டு இருந்துச்சு.  யாரும் என்னை அக்காகிட்ட போக அனுமதிக்கல. யாரிடம் கேட்டாலும் கேட்டாலும் பதில் இல்ல. எங்க பாட்டியிடம் கேட்டதும் சகோதரி தலையில் காக்கை கரைந்தவிட்டதாக சொல்லி விளயாட அனுப்பிவிட்டார். நானும் இதற்க்கெல்லாம் போய்  யாரவது அழுவாங்களா என்று நக்கல் அடித்துவிட்டு விளையாட சென்றுவிட்டேன்.  ஒருவேளை அப்போது எனக்கு புரிந்துகொள்ளகூடிய வயது இல்லை என்பதால் வாய்க்கு வந்ததை என்னிடம் சொல்லி அனுப்பி இருந்திருக்கலாம்.

பிறகு நாட்கள் ஆனதும் ஒவ்வொரு மாதமும் திண்ணையில் ஒரு கிழிந்த பழைய பாய், தலைக்கு பலவ கட்டை, குறுக்க ஒரு உலக்கை இருக்கும். அதுக்குள்ளே தான் என் சகோதரி அந்த நாட்களில் இருப்பாள். சாப்பாடு தண்ணி வேண்டுமென்றாலும் அடுத்தவரை நம்பி தான் இருக்க வேண்டும். ஏனென்றால் வீட்ட்க்கு உள்ளே செல்ல கூடாது. என்னிடம் பலமுறை தண்ணீர் கேட்டு கெஞ்சியதுண்டு. விளையாட்டு தனமாக நான் செய்யாமல் விளையாட சென்றுவிடுவேன். பொழுதுபோக தாயம், பல்லாங்குழி விளையாடும் போது லோசாக சகோதரி மீது கைபட்டுவிட்டால் உடனே  குளிக்க சொல்லி கடுபேத்துவிடுவார்கள்.

இந்த நிலை தற்போது சற்று மாறியிருந்தாலும் கூட சில சாதிய சமூகங்கள் இன்னமும்  தொடர்கின்றனர். குறிப்பாக மிகவும் பின்தங்கிய மாவட்டங்களான வடமாவட்டங்களில் உள்ள கிராமங்களில் போதுமான விழிப்புணர்வு இல்லாததால் இந்த கட்டுபாட்டு முறைகளை கடைபிடிக்கின்றனர்.

ஒரு நாள் முகநூலில் ஒரு தோழியின் பதிவை காண நேர்ந்தது, அந்த பதிவில் மாதவிடாய் சம்மந்தமாக செய்திகள் பதியபட்டிருந்தது. அதனூடக பல விவாதங்கள் நிறைய கேள்விகள் தொடுத்து விளக்கமும் பெறபட்டேன். அதில் ஒரு குறும்படம் பற்றி விவரித்தார்கள்.

மாதவிடாய் என்பது பெண்களின் உடலில் ஏற்படும் மாதாந்திர நிகழ்வு. இன்னும் தெளிவாக சொன்னால் மனித பரிணாமத்தின் மிக முக்கிய முடிச்சு. இதை பற்றி ஆண்கள் பெண்களின் பொதுபுத்தியில் சரியான புரிதல்கள் இல்லை. மாதவிடாய் நேரத்தில்  பெண்ணுக்கு  தேவைப்படும் சரியான வசதிகள் கிடைக்கிறதா. மாதவிடாயின் அறிவியல் பார்வை என்ன?மாதவிடாய் ரத்தம் அசத்தமானதா? போன்ற வற்றை பற்றி சுமார் 40 நிமிடம் ஒடக்கூடிய குறும்படம்  தான் "மாதவிடாய்".

பள்ளிச்சிறுமியிலிருந்து,ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், தனியார்நிறுவன ஊழியர்கள், உடலுழைப்பில் ஈடுபடுபவர்கள்.ஊனமுற்ற பெண்கள் என  பலதரப்பட்ட பெண்களின் நேரடி அனுபவங்களோடு, அவர்களின் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

'மாதவிடாய்' குறித்த ஒரு தெளிவையும், சிரமப்படும் பெண்களின் மீது அக்கறை கொள்ளுங்கள் என்பதையும் முன்வைக்கிறது படம்.

இந்த குறும்படம் எந்த இணையத்தில் எங்கும் கிடைக்காது.

காரணம் எளிதில் கிடைக்கும் எந்த ஒரு விசயமும் அலட்சியபடுத்தபடும் என்பது நாமறிந்ததே!
அந்த தோழியிடம்  அந்த குறும்படம் வேண்டி ஒரு மின்னஞ்சல் செய்து எனது பொது நல நோக்கமறிந்து எனக்கு துரித அஞ்சலில் அனுப்பி வைத்தார். அவர்களின் நோக்கம் குறைந்தது 50 பேருக்காவது(ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து) அந்த படத்தை போட்டு காட்டவேண்டும். மக்களும் தெளிவு பெறவேண்டும்.

இந்த குறும்படத்தை கணவனும், மனைவியுமான இளங்கோவனும், இயக்குனர் கீதா(தோழி) இயக்கியுள்ளார். விலை 100 ரூபாய் என்று நினைக்கிறேன். இந்த குறும்படத்தை பார்க்க விரும்பினால் geetaiis@gmail.com என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
-தஞ்சை தேவா
வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது . உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!! ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.


0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls