Monday, December 23, 2013

உயிர்காக்கும் அன்புமணி(108)!

உயிர்காக்கும் அன்புமணி(108)!

கட்சிக்கு அப்பாற்பட்ட எனக்கு பிடித்த மனிதரில் திரு மருத்துவர் அன்புமணி ராமதாஸ்அவர்களும் ஒருவர்.

இந்தியாவின் முன்னால் சுகாதாரத்துறை அமைச்சர் என்ற கோணத்தில் பார்க்கும் போது தான்  ஏற்றுகொண்ட அமைச்சர் பொறுப்பிற்கு முழு தகுதியானவர் என்று தான் கொண்டு வந்த சுகாதார திட்டங்களால் நிரூபித்து காட்டியவர்.

அந்த வகையில் ஒரு சில விசயங்களை கட்சி சார்பற்று  அவரின் செயல்பாடுகளை உங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

மருத்துவர் அன்புமணியால் கொண்டு வர பட்ட புகையிலை, குடிப்பழக்க எதிரான சட்டம் மறைக்க [மறுக்க] பட்ட உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதன் மூலம் அவருக்கு நான் செலுத்தும் நன்றி கடனாக நினைக்கிறேன்.

பல வெளிநாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில், ஏற்கனவே வழங்கும் புகை பிடிப்பதைக் கட்டுப்படுத்தும் எச்சரிக்கை அறிக்கைகள், தணிக்கை நெறிகளை இந்தியாவுக்குக் கொண்டு வந்தவர் மரு. அன்புமணி ராமதாஸ். இவரது ஆட்சியில், அமெரிக்காவில் இருப்பதைப் போலவே, பொது இடங்களிலும், அலுவலகங்களிலும் புகை பிடிப்பது தடை செய்யப்பட்டது. சிகரெட், புகையிலைப் பொருள்கள் விளம்பரங்கள், சிறுவர்களுக்குப் புகையிலைப் பொருள்கள் விற்பது, கல்விக்கூடங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பது என்பவை இவரால் தடை செய்யப்பட்டது.

புகை பிடிப்பது, மது அருந்துவது போன்றவற்றை இந்தியத் திரைப்படங்கள், தொலைக்காட்சிகள் மூலம் கவர்ச்சிகரமாகக் காட்டி இளைஞர்களைப் போதைப் பொருள்களுக்கு அடிமையாக்குவதைத் தடுக்கக் கடுமையான தணிக்கை நெறிகளைக் கொண்டு வந்தார். இவரது இந்தச் செயல்கள், புகையிலை, மற்றும் மதுபானப் பெரு நிறுவனங்களின் கடுமையான எதிர்ப்புக்கு ஆளாக்கின. இருபினும் எந்த வித அச்சுறுத்தல்களுக்கும் ஆசைகளுக்கும் அடிபணியாமல்  இளைஞர்கள் நலன் கருதி கொண்டு சட்டங்களை கொண்டுவந்தவர் மருத்துவர் அன்புமணி அவர்கள். ஆனால் இன்று சட்டம் வெறும் காகித சட்டமாக மட்டுமே காட்சியளிக்கிறது. ஆட்சியாளர்களில் அரவணைப்பில் அமுல்படுத்த படாமல் முடங்கி கிடப்பவை ஏராளம்.

மத்தியில் அமைச்சராக இருந்தபோது ஒரு ஆண்டுகாலம் திட்டமிட்டு அமெரிக்க- இந்திய மருத்துவக் குழு ஆராய்ந்து ஓராண்டு முயற்சியில் 950 கோடி ரூபாய் நிதியில் திரு அன்புமணி அவர்களால் இந்த 108 ஆம்புலன்ஸ் சேவை கொண்டு வரப்பட்டு14 மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. ஆனால் சிலர் தாங்கள் தான் கொண்டு வந்ததாக சொல்லிக் பாமரனனிடம் திணித்து வைக்கின்றனர்.

ஒரு வேளை அம்மா கொண்டு திட்டத்தில் எல்லாம் தன பெயரையும் இலையையும் பதிப்பது போல், கலைஞர் தன்  பெயரையும் சின்னத்தையும் பதித்தை போல இவரும் தன் பெயரையோ அல்லது தன்னை சார்ந்த கட்சியின் சின்னத்தையோ பதித்திருந்தால் இப்படி கண்டவர்களெல்லாம் சொந்தம் கொண்டாட வாய்ப்பு இருந்திருக்காது என்று கூட நினைக்க வைக்கிறது. ஆனால் மரு. அன்புமணி அவர்களோ திட்டம் மக்களுக்கு சென்றால் போதும் என்ற நல்ல எண்ணத்தில் கொண்டு வந்ததை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

உண்மையில் சொல்ல போனால் படித்த இளைஞர்கள் அனைவருக்கும் மருத்துவர் அன்புமணி தான் இந்த திட்டத்தை கொண்டு வந்தது என்பது தெரியும். இலசவசத்தை கொடுத்து பாமரனை மட்டும் தானே ஏமாற்ற முடியும். திராவிட கட்சிகளுக்கு படித்தவர்கள் பாட புகட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை இணையதள கணக்கெடுப்பின் மூலம் இளைஞர்கள் அவ்வபோது நிரூபித்து கொண்டுள்ளதை வைத்தே புரிந்து கொள்ளலாம்.

ஆட்சியில் கொண்டு அதிகாரத்தில் இருந்த போது நல்ல திட்டங்களை வகுத்து சட்டங்களாக்கி செயல்பட்டதோடு நிறுத்தி விடாமல் தன்னிடம் ஆட்சியையும்  அதிகாரமும் இல்லையென்றாலும் தொடர்ந்து மது, புகைக்கு எதிராகா மேலும் கடுமையான சட்டம் கொண்டு வரவும், விவசாய முன்னேற்றதிற்க்காகவும், தமிழர் பாதுகாப்பிற்க்காவும் தொடர்ந்து  போராடி செயல்பட்டும் வரும் உம்மை பாராட்டுவதில் பெருமை கொள்கிறேன்.

ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டும் தான் செயல்படுகிறார் என்ற மாயையை உடைத்து அனைத்து தரப்பு மக்களுக்காக செயல்படுபவர் என்பதை எங்களிடத்தில் உணர்த்த  நீங்கள் கொண்டு வந்த சட்டங்களும் திட்டங்களுமே சான்று.

அந்த வகையில் ஒட்டுமொத்த நடுநிலை மனம் கொண்ட மக்கள் அனைவரும் உம்மை ஆதரிப்பார்கள் என்பதில் இம்மியளவும் சந்தேகமில்லை.

உம்மீது சாதி சாயம் பூசி  தூற்றுபவர்களை புறந்தள்ளி சாதனையை நோக்கி உங்கள் பயணத்தை தொடருங்கள்.

மதுவை ஒழிப்போம்! மரணத்தை ஜெயிப்போம்!

-இவண்
தஞ்சை தேவா
வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது . உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!! ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.


0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls