மாதவ படையாட்சியாக வாழ்ந்திருக்கும் சத்யராஜ் நடிப்பில் பல சிகரங்களைத் தொட்டிருக்கிறார். உழைப்பின் சின்னமாக மட்டும் வாழ்ந்த ஒருவராக மட்டுமல்ல இறந்தபிறகும் பிணமாகவும் சில நிமிடங்கள் நடித்து அசத்தியுள்ளார். பருவத்தின் மாற்றங்களுக்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தன் இமேஜைப் பற்றிக்கவலைப்படாமல் பாத்திரத்திற்கு ஏற்றாற்போல தேவைப்படும் காட்சிக்கு கோவணம் கட்டியும் நடித்துள்ளார்.
பிள்ளைகளை பார்க்க வேண்டும் என்ற ஆசையை மனதிற்குள் பூட்டியே வைத்திருந்து, தூக்கத்தில் அதை வெளிப்படுத்தும்போதும், மனைவி இறந்ததும் அலறித் துடிக்கும் போதும், பேரக் குழந்தையை கொஞ்சிவிட்டு, அதற்கு தன்னால் எதுவும் தரமுடியவில்லையே என்று மனம் இறுகுவதும் நம் நெஞ்சை பிழிகிறது.
மாதவா படையாட்சிதான் கதையின் நாயகன் என்றாலும் அவர், அவரது குடும்பம், அவரது மண், மக்கள், மரம், செடி, கொடி புல் பூண்டு எல்லாமும் பதிவாகி நம்மை ஏதேதோ செய்கின்றன. குடும்ப அமைப்பு எந்த கட்டமைப்பில் உருவாக்கப்படுகிறது. அது எதனால் சரிய ஆரம்பிக்கிறது என்பதை அழகாக படமாகச் சொல்லியிருக்கிறார்.
ஒரு சிறந்த கதையை சினிமா மொழியில் ஒன்பது ரூபாய் நோட்டு படத்தின் மூலமாக சிறப்பாகச் சொல்லியிருக்கிறார் தங்சர்பச்சான்.மண்ணின் தன்மையோடு, மக்கள் மொழியோடு கலாச்சாரத்தோடு வாழ்க்கை முறையோடு இணைந்த ஒரு சிறந்த கதையை சினிமா மொழியில் சிறப்பாகச் சொல்லியிருக்கும் தங்சர்பச்சானை முதுகுவலிக்கும் வரை தட்டிக்கொடுத்துப் பாராட்டலாம்.
திருட்டு CD யில் தெளிவாக இருந்தால் பாருங்கள் அல்லது ஒரிஜினல் DVD கிடைத்தால் விலை அதிகம் என்றாலும் வாங்கி அதற்காக நேரம் ஒதுக்கி பாருங்கள் உங்களை உங்கள் அனுமதியின்றி வட மாவட்டத்தின் மண், மக்கள், மரம், செடி, கொடி புல் பூண்டு இவற்றோடு நம்மை ஊடுருவ செய்துவிடும் எனபது நிச்சயம்.
ஒரு பானைக்கு சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பது போல இந்த 10 நிமிட வீடியோவையும் உங்களுக்காக இணைத்துள்ளேன் .
வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது .
உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!!
ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.
1 comments:
காணொளிக்கு நன்றி...
Post a Comment