Thursday, December 19, 2013

யார் இவர்கள் ?


 
நான் சென்னை வந்த காலத்தில் வேலை தேடவும் வேலைக்கு செல்லவும் பெரும்பாலும் மெட்ரோ ரயில் பயணங்களையே மேற்கொண்டது உண்டு. அப்போது பல முறை இவர்களை கண்டு பயந்ததும் அருவருப்பு பட்டதும் உண்டு. சில நேரம் ஓடி ஒழிந்ததும் சில நேரம் கையில் இருப்பதை அவர்களிடம் கொடுத்துவிட்டு பின் மனதுக்குள் திட்டியதுமுண்டு. காரணம் என் நண்பர்கள் ஏற்படுத்திய பயம், நீ காசு கொடுக்கவில்லையென்றால் தன் பாவாடையை தூக்கி காட்டி  மற்றவர்கள் முன் அசிங்கபடுத்தி அவர்கள் சாபம் விட்டால் உடனே பலித்து விடும் என்ற முட்டாள் தனமான பயம்.

ஆம் பல நாட்கள் பழகி போன இந்த நிகழ்வு நாளடைவில் அவர்களிடத்தில் உள்ள பயம் சற்று விலக தொடங்கியது. அவர்களின் அவர்களின் வாழ்கை நிலையை தெரிந்தபின் பல முறை வருந்தியதுண்டு. சில நேரம் வலியனாக சென்று பேசியதுண்டு. நல்ல தன்மையான (ஒரு சிலரை தவிர)அவர்கள் ஏக்கம், சமூகத்தில் நம்மிடம் யாரும் சாதரணமாக பழகவில்லை என்ற ஏக்கம், சில நேரம் பெற்றவர்களே புறந்தள்ளிய கொடுமை அவர்களின் கண்களின் கண்ட தருணம் உண்மையில் என்னையும் என் நண்பனையும் கலங்கடித்துவிட்டது.

பல காலமாக அலி, பேடி, அரவாணி போன்ற சொற்களால் கேலியுடன் அழைக்கப்பட்டு சமூகத்தில் ஆண்களாகவோ அல்லது பெண்களாகவோ வாழ முடியாமல் மன உளைச்சலுடன் சமூக மதிப்பு எதுவுமில்லாமல் தனிப்பட்ட சமுதாயமாக எந்தத் தொழிலும் செய்ய முடியாமல் கேளிக்கை நடனம் மற்றும் பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தப்பட்டு வாழ்க்கையின் அர்த்தம் தெரியாமல் அவலத்தில் வாழ்ந்து வரும் இவர்களில் பிறப்பை பற்றிய  நிச்சயம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தான் இந்த பதிவை உங்களிடத்தில் பதிகிறேன்.

யார் இவர்கள் ?

பெண்ணின் மாதவிடாய் சுழற்சியில் குறிப்பிட்ட சில நாட்களில் ஆணின் உயிரணுவுக்காக கருமுட்டை காத்திருக்கும். அந்த நாட்களில் உறவு கொள்ளும்போது உயிரணுவும், கருமுட்டையும் இணைந்து முதல் செல் உருவாகிறது. அந்த செல் பலமடங்கு பெருகி, கருவாக உருவாகிறது. இதுதான் கரு ‘உரு’வாதலின் ரகசியம்.

ஆண் உயிரணுவில் 23 குரோசோம்களும், பெண்கருமுட்டையில் 23 குரோசோம்களும் சேர்ந்துதான் 23 ஜோடி குரோசோம்களாகின்றன. வயிற்றில் இருக்கும் கரு, ஆணா, (அ) பெண்ணா என்று நிர்ணயிப்பதற்கு ஒரு ஜோடி குரோசோம் இருக்கிறது. இதற்கு ‘செக்ஸ் குரோசோம்’ என்று பெயர்.

கருவின் செக்ஸ் குரோசோம் XY என்றால் அது ஆணாகவும், XX என்றால் அது பெண்ணாகவும் பிறக்கும். முறையாக நடந்து கொண்டிருக்கும் போது இதில் எந்தவித இடைஞ்சலும் இல்லை. இயற்கையின் இயல்பில், இப்படி இருப்பதில், இந்த மகத்தான பணியில் மிகவும் அரிதாக தவறுகள் ஏற்படும். இந்த தவறால் பிறப்பவர்கள்தான். தவறி பிறந்த ‘அவர்கள்’ இந்த தவறுதலுக்கு மருத்துவம் தந்த பெயர் ‘மியூட்டேஷன்’ (Mutation) என்று தான் சொல்வோம். இதனால் XX ஆகவும் இல்லாமல், XY ஆகவும் இல்லாமல், XXY அல்லது XYY போன்ற தவறான ஜோடிகளாக அமைந்து விடுகின்றது.

[பி.கு. ஆண் குழந்தை பெண் தன்மையுடனும், பெண்குழந்தை ஆண் தன்மையுடனும் பிறப்பதனை மருத்துவதில் Intersex disease என்கிறார்கள். இந்த ஆண், பெண் கலப்பைத் ஓரளவு தடுக்க முடியும்.
கர்ப்பிணிகள், குழந்தையை எதிர்நோக்கி இருக்கும் நிலையில் வலி நிவாரண மாத்திரைகளை சாப்பிடக் கூடாது. மாதவிடாமல் தள்ளிப் போடுவதற்கும், கரு கலைப்பிற்காகவும், கண்ட மாத்திரைகளையும் சாப்பிடக் கூடாது. அடிக்கடி எக்ஸ் - ரே எடுக்கக் கூடாது. கர்ப்ப காலத்தில் மருத்துவரின் ஆலோசனையைப் பெறாமல் மருந்துகளை சுயமாக சாப்பிடக் கூடாது. சிலவகை மாத்திரைகளில் ஆண் ஹார்மோன் சக்தி உள்ளதால், கருவில் பெண் குழந்தைகள் உருவாகும் நிலையில் தீய விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பிறக்கும் பெண்குழந்தை ஆண் குறிகளுடன் பிறக்கவும் வாய்ப்பு உண்டு.]
-தஞ்சை தேவா

வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது . உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!! ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.


1 comments:

ashokromans said...

very informative and i like it and please friends read and share it with other and make this Transgender community to live peacefully and happily forever

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls