Thursday, June 26, 2014

கும்பகோணம் டிகிரி காப்பி

கும்பேஸ்வரர் கோவில் மொட்ட கோபுரம் இருக்கற சாலையில நகராட்சி துவக்கப்பள்ளிக்கு கொஞ்சம் தள்ளி அதாவது இப்ப சண்முகபவன்னு ஒரு ஹோட்டல் இருக்கே அதுக்கு எதிர்த்தாப்ல பஞ்சாமி அய்யர்னு ஒருத்தர் காப்பி கிளப் நடத்துனார் . காலையில அஞ்சு மணியிலேர்ந்து காப்பி கிடைக்கும் . சுத்த தண்ணி கலக்காத பசும்பால் , இப்ப மாதிரி எல்லாத்தையும் அடுப்புலேயே போட்டு காச்சி பால வெந்நீரா மாத்துற வேலை கிடையாது .எப்ப காபி கேட்கறாங்களோ அப்ப பால எடுத்து காச்சி, டிகாஷன் சேத்து, சர்க்கரை போட்டு தருவாங்க .

டிக்காஷன் போடுற பில்டர் பித்தளை , அதை ஊத்தி வச்சுக்குற கெண்டி பித்தளை ,கொடுக்குற டபரா செட் பித்தளை, டபரா செட் இன்னிக்கு சும்மா பேருக்கு வச்சிருக்காங்களே அது மாதிரி இல்லை அடிச்சா மண்ட உடைஞ்சு போய்டும் அவ்வளவு கனம் இருக்கும் .1960ல காபி பதினஞ்சு காசு .பஞ்சாமி ஐயர் காபி கிளப் இருக்குறப்ப அந்த ரோட்டுல காபி சாப்பிடாம அந்த இடத்த தாண்டி போயிற முடியாது .தெருவே மணக்கும் .கும்பகோணம் டிகிரி காபியோட முன்னோடி பஞ்சாமி ஐயர்.

ம் ...........அதெல்லாம் ஒரு காலம் காசு பணத்த தாண்டி ,
தொழிலையும் ,மனிதர்களையும் நேசித்தவர்கள் வாழ்ந்த காலம் .இன்னிக்கு கும்பகோணத்திலேயே நல்ல காபி இல்ல. (மற்ற காப்பியை ஒப்பிடும் போது கும்பகோணம் டிகிரி பரவாயில்லன்னு சொல்லலாம் )
வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது . உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!! ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.


0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls