திக்கெட்டும் தெரியும் கோபுரங்களிடையே அருள்மிகு ராமசாமி கோயில்
கோபுரத்துக்கு ஏதிரே, அதாவது, ராமசாமி கோயில் சன்னதி வீதியில் நீங்கள்
இறங்குகிறீர்கள். கொழுந்து வெற்றிலை, பன்னீர்ப் புகையிலை, வாசனைச்
சுண்ணாம்பு, ஊதுபத்திகள், சாம்பிராணி, சந்தனம், பூக்கள், நாட்டு மருந்துகள்
என எல்லாமும் கலந்த ரம்மியான மணம் உங்கள் நாசியைத் துளைக்கிறது. மெல்ல
நடக்கிறீர்கள். எதிரே பெரிய கடைவீதியின்
முதல் கடை. 'முராரி ஸ்வீட்ஸ்'. நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பூரி, பாஸந்தி
இரண்டும் ஒருசேரக் கிடைக்குமிடம். இன்னும் ஓர் ஆண்டில் நூற்றாண்டைக்
கொண்டாடப்போகும் 'முராரி ஸ்வீட்'ஸின் பூரி, பாஸந்தியைச் சுவைக்கும்.
பால் சுண்டும்போது மங்கிய வெண்மையும் குங்குமப்பூ நிறமும் கலந்த மெல்லிய மங்கல் நிற பாசந்தி! சுடச்சுட பூரியைப் பிய்த்து பாஸந்தி பாலேட்டைத் தொட்டுச் சாப்பிடும் ருசி இருக்கிறதே...
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தேர்ந்த சமையல் கலைஞரான முராரி லால் சேட் 1915-ல், ஒரு சின்ன இடத்தில் தொடங்கிய கடை இது. காலையில் அவரே பலகாரம் செய்வார். மாலையில் அவரே வியாபாரம் செய்வார். அன்றைய காலகட்டத்தில் அவருடைய நெய் சோன்பப்டிக்கும் மிளகு காராபூந்திக்கும் பெரிய கூட்டம் இங்கு வரும். பின்னாளில், அவருடைய சகோதரர் ஆனந்தராம் சேட் காலத்தில் பால் இனிப்புகள் பிரபலமாயின. அவருடைய மகன் ஐ. தேவிதாஸ் சேட் காலத்தில் டிரை குலோப்ஜாமூனும் இஞ்சி பக்கோடாவும் பிரபலமாயின.
முராரி ஸ்வீட்'ஸின் பூரி-பாஸந்தி பக்குவம் .
பத்துப் பங்கு பால், அரைப் பங்கு ஜீனி. இரண்டும் சேர்ந்து மூன்றரைப் பங்கு பாலடையாக சுண்ட வேண்டும். இறக்கும்போது கொஞ்சம் குங்குமப்பூ சேர்த்தால் பாஸந்தி. நயமான பஞ்சாப் கோதுமை மாவில் வெந்நீர் விட்டு 20 நிமிஷங்கள் பிசைந்து, 20 நிமிஷங்கள் ஈரத்துணி போர்த்தி புளிக்க விட்டு போட்டு எடுத்தால் பூரி தயார்.

வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது .
உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!!
ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.
0 comments:
Post a Comment