Monday, September 8, 2014

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம்

தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சி சார்ந்து மட்டுமல்லாமல், பல பல்கலைக் கழகங்கள் வழங்காத முக்கிய படிப்புகளையும் தருகிறது தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம்.

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் தமிழ் மொழிக்காக, ஒரு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும் என, 1981ம் ஆண்டு, மதுரையில் நடந்த, உலகத்தமிழ் மாநாட்டில் அறிவித்தார். உடனடியாக அதற்கானக் குழு ஒன்றை, ம.பொ.சிவஞானம் வ.சு.ப.மாணிக்கனார், சாலை இளந்திரையன், கி.ஆ.பெ.விஸ்வநாதன் ஆகிய அறிஞர்கள் தலைமையில் நியமிக்கப்பட்டது.

தமிழ் மொழிக்கான தனித்தகுதி பெற்ற பல்கலைக்கழகத்தை, உயர் கல்வித்துறையின் கீழ், 1000 ஏக்கர் பரப்பளவில் ஏற்படுத்துவது என, முடிவு செய்து துவக்கப்பட்டதே தமிழ்ப் பல்கலைக்கழகம். தமிழ் மொழி, தமிழர் பண்பாட்டினை உலக அளவில் பரப்புவதற்கான ஓர் உயர்ப் பல்கலைக்கழகமாக உயர்த்த, உயர் கல்வித்துறையின் சிறப்பு அந்தஸ்தைப் பெற்ற பல்கலைக்கழகமாக விளங்கியது.

சிலரது சுய நலத்திற்காக, எம்.ஜி.ஆர்., ஆட்சி மறைந்து, மாற்றுக் கட்சி ஆட்சிக்கு வந்தபோது, தமிழ் அறிஞர்களின் ஆலோசனைகளைக் கேட்காமல், தமிழ் பல்கலைகழகத்தை, தமிழ் வளர்ச்சிதுறைக்கு மாற்றிய காரணத்தால், தமிழ் பல்கலைக்கழகம் தன் தனித்தன்மையை இழக்கத்தொடங்கியது. அது இன்று வரை நீடித்து வருகிறது.

மத்திய பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் போல் தமிழ்ப் பல்கலைக்கழகம் செயலாற்ற வேண்டுமெனில், இப்பல்கலைக்கழகத்தை, உயர்கல்வித்துறையின் கீழ் கொண்டு வந்து, சிறப்புப் பல்கலைக்கழகமாக மாற்றவேண்டும் என்பதே, தமிழ் அறிஞர்களின் விருப்பம். தமிழ் வளர்ச்சி இயக்கத்தின் கீழ் ஒரு நிறுவனம் போல், தமிழ்ப் பல்கலைக்கழகம் செயல்பட்டால், பல்கலைக்கழகத்தின் தனித்தன்மை இழந்து, தமிழகத்தின் பிற பல்கலைக்கழகங்கள் பெறுகின்ற தமிழக அரசின் நல்கைகள், மற்றும் பல்கலைக்கழக நல்கைக் குழு( யு.ஜி.சி.,) நல்கைகளை இழக்கும் நிலை ஏற்படும். 
வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது . உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!! ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.


0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls