Tuesday, September 9, 2014

காணாமல் போன நாட்டுசர்க்கரை, அச்சுவெல்லம் தொழில் ...


நாட்டுசர்க்கரை அச்சு வெல்லத்துக்கு பேர் போன கும்பகோணம் பகுதியில் இன்று அங்கொன்றும் இங்கொன்றுமாக...

அச்சு வெல்லம் தயாரிப்பதற்கு தஞ்சை மாவட்டத்தில் நக்கன்பாடி, கபிஸ்தலம், அய்யம்பேட்டையை சுற்றியுள்ள வீரமாங்குடி, தேவன்குடி, மணலூர், கணபதி அக்ரகாரம், மாகாளிபுரம், உள்ளிக்கடை, பட்டுக்குடி, இலுப்பங்கோரை மற்றும் கும்பகோணம் சுற்று வட்டார பகுதிகளான மாகாளிபுரம், புதுத்தெரு, திருவைகாவூர், சுவாமிமலை, திருப்புறம்பியம், நாச்சியார்கோவில், திருவிடை மருதூர், ஆடுதுறை,  மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்பகுதிகளில் பல ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில் கரும்பு பயிரிடப்பட்டு கொட்டகைகள் அமைத்து கரும்புகளை வெட்டி  எந்திரம் மூலம் கரும்பை சாறாகப்பிழிந்து மிகப்பெரிய கொப்பரை அமைத்து கரும்பு சாற்றை அதில் ஊற்றி தீயிட்டு, பதமாக காய்ச்சிய பின்னர் மரத்திலான அச்சில், பாகை ஊற்றி, காய்ந்த பின் அச்சு வெல்லமாக தயார் செய்வார்கள். கரும்பை சாறாக பிழிந்தபின் கிடைக்கும் சக்கையை காய வைத்து எரிபொருளாக பயன்படுத்துவார்கள்.

ஒவ்வொரு பட்டறைகளிலும்(நாங்க ஆலகொட்டா ன்னு சொல்வோம்) 5க்கும் மேற்பட்டோர் பணிபுரிவார்கள். 1½ டன் கரும்பை சாறாகபிழிந்து அச்சுவெல்லமாக தயாரிக்கும் பொழுது 150 கிலோ அச்சு வெல்லம் கிடைக்கும். 1½ டன் கரும்பை அச்சு வெல்லமாக தயாரிக்க 2 மணி நேரம் ஆகிறது. செப்டம்பர் மாதத்திலிருந்து பிப்ரவரி மாதம் வரை தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் அதிக அளவு வெல்லம் தயாரிக்கும் பணி நடைபெறுகிறம்.

30 கிலோ எடை கொண்ட அச்சுவெல்லம் மூட்டை தரத்திற்கு ஏற்றவாறு ரூ.1000 முதல் ரூ.1500 வரை தயாரிக்கும் இடத்தில் மொத்த விற்பனையாக செய்யப்படுகிறது.
மேலும் இங்கு உருண்டை வெல்லம், நாட்டு சர்க்கரை உள்ளிட்டவைகள் தயாரிக்கப்பட்டது.

ஆனால் இன்று ஆள் பற்றாக்குறையால் சர்க்கரை ஆலைகளுக்கு எற்றி விடவேண்டிய அவலம்..
வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது . உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!! ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.


1 comments:

Unknown said...

காலத்தின் கட்டாயம்...இந்த நிலை மாறும்.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls