Monday, September 8, 2014

அச்சுறுத்தும் எக்டோபிக் பிரக்னன்சி (Ectopic Pragnancy)- பெண்களே உஷார்!!!

முதலில் ஒரேயொரு முழு ‘செல்’லாக இருக்கும் கரு, நாள்தோறும் வளர்ந்து, இரண்டு இரண்டாக பிரியும். அதேநேரம், ஃபெலோப்பியன் குழாய் வழியாக அவை மெல்ல மெல்ல கருப்பையை நோக்கி நகரும். கடைசியில் கருப்பையில் போய் அது உட்காரும்போது கிட்டத்தட்ட நூறு செல்களாக பிரிந்திருக்கும்! ஆரோக்கியமான கர்ப்பம் இப்படியிருக்கும்.

மாறாக ஆரோக்கியமான கர்ப்பம் போன்ற தொடங்கி உங்கள் மாத விலக்கு தள்ளி செல்லும், சிறுநீா் பாிசோதனையில் கா்ப்பம் என காட்டும். கரு கருப்பையின் வெளியே தங்குவதால் கடுமையான வலி மற்றும் கருமுட்டை குழாய் உடைந்து என்றால் அதிக இரத்தப்போக்கு - அல்லது நீங்கள் குறைந்த வயிற்று வலி மற்றும் லேசான இரத்த ஒழுக்கு அனுபவிக்க வேண்டும்.

‪ஆனால்‬ சில சமயங்களில், கரு கருப்பையை நோக்கி நகராமல், ஃபெலோப்பியன் குழாயிலேயே வளர ஆரம்பிக்கும். இதைத் தான் எக்டோபிக் கர்ப்பம்’ என்கிறார்கள். ஃபெலோப்பியன் குழாயில் நோய் தொற்று இருந்தால் தான் இப்படி ஆகும். பொதுவாக கரு தானாக நகராது. ஃபெலோப்பியன் குழாயின் தசைகள் சுருங்கி விரிந்து, அதன் மூலம்தான் கரு நகர்த்தப்படுகிறது. நோய் தொற்று காரணமாக சேதமடைந்த ஃபெலோப்பியன் குழாய் என்றால் சுருங்கி விரியாது. அல்லது ஃபெலோப்பியன் குழாய் சுருங்கி கருவின் இயக்கத்தை தடுக்கலாம். சில பெண்களுக்கு ஃபெலோப்பியன் குழாயின் அமைப்பே வளைந்து நெளிந்து இருக்கும். இப்படிப்பட்ட குழாய்களால் ‘கரு’வின் இயக்கம் நிச்சயம் தடைபடும்.

அதுமட்டுமல்ல, இதனால் உயிருக்கே ஆபத்து வரலாம். ஊசி நுழையும் அளவுள்ள மெல்லிய ஃபெலோப்பியன் குழாயில் கரு வளர ஆரம்பித்தால் என்னாகும்? முடிந்த வரை தாங்கி, முடியாத நிலை வரும்போது வெடித்துவிடும். உடனே கடுமையான வயிற்றுவலியும், ரத்தப்போக்கும் ஏற்படும். உடனடியாக டாக்டரை பார்க்க வேண்டிய விஷயமிது. கர்ப்பம் என்று உறுதியானதுமே டாக்டரிடம் அடிக்கடி பரிசோதனை செய்து கொண்டால் இத்தகைய ஆபத்துக்களை சந்திக்காமலே தவிர்க்கலாம்.

தேவையான பரிசோதனை:
அல்ட்ராசவுண்ட் மூலம் செய்யப்படும் ஸ்கேன் பரிசோதனை, கர்ப்ப காலத்தில், கருப்பை, கருமுட்டை குழாய்கள் மற்றும் வயிற்று பகுதியில் உள்ளவற்றை துல்லியமாக படம் பிடித்து காட்டுகிறது. இதன் மூலம்
சாதாரண கர்ப்பமா இடம் மாறிய கர்ப்பமா என்று உறுதி செய்யப்படும்.
இடம் மாறிய கர்ப்பம் கரு கர்ப்பப்பைக்கு வெளியே வாழ முடியாது,எனவே கர்ப்பம் கலைப்பது நல்லது.

இந்த வகை பாதிப்பிற்கு பிறகு, நீங்கள் குழந்தையை கருக்கலைப்பு செய்த பின்னரும் சிகிச்சை எடுக்க வேண்டும்.

ஃபெலோப்பியன் குழாயில் எந்த பிரச்சனை இருக்கிறது, என ஆராய்ந்து அடுத்த பிரசவத்திற்கு முன்னெச்சாிக்கையாக இருப்பது நல்லது.

(குறிப்பு : முன்பு போல் மருத்துவரின் துணையில்லாமலே சுக பிரசவம் நடக்க தற்போது உள்ள நவீன யுகத்தில் வாய்ப்பே இல்லை. சத்து மருந்தாக இருந்தாலும் சரி சத்தான உணவு என்கிற பெயரில் நாம் உண்ணும் சக்கை உணவாக இருந்தாலும் சரி அனைத்தும் பக்கவிளைவுகள் நிறைந்ததே)
வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது . உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!! ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.


0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls