Friday, December 19, 2014

லேடிஸ் ஹாஸ்டல் - உஷார்

பெண்களுக்கான பதிவு (பெத்தவங்களுக்கும் சேர்த்து)!

‎ஒரு‬ விடுதியில் தங்கும்போது அந்த விடுதியில் தங்கி இருக்கும் பெண்கள் எப்படிப்பட்ட பெண்கள் என்று பார்ப்பது நல்லது. அதாவது, உங்கள் மாத வருவாயும் உங்களுடன் தங்கி இருக்கும் பெண்ணின் மாத வருவாயும் ஓரளவுக்காவது நிகராக இருக்க வேண்டும். உங்களைவிட இரண்டு மடங்கு வருமானம் வாங்கும் பெண்களோடு தங்கி இருக்கும்போது, அவர்கள் செய்யும் அசாதாரண செலவுகளுக்கு நீங்களும் பழக்கமாவீர்கள். அல்லது அந்தப் பெண்கள் உங்களைப் புறக்கணிக்கவும் செய்யலாம்.

உடன்‬ தங்கி இருப்பவர்கள் என்ன தொழில் செய்கிறார்கள் என்று முதலில் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

‎சமையல்‬ அறையின் அமைவிடம் சரியாக இருக்கிறதா? டைனிங் ஹால் இருக்கும் இடம் எப்படி இருக்கிறது, துணிகள் சலவை செய்யும் இடம் போன்றவை சரியான இடத்தில் இருக்கிறதா எனப் பாருங்கள்.

‎நீங்கள்‬ தங்கப்போகும் விடுதியில் தனி ஆபீஸ் ரூம் இருக்கிறதா என்பதைப் பாருங்கள்.

‎விடுதி‬ அமைந்து இருக்கும் இடம் மெடிக்கல், ஏ.டி.எம், பேருந்து நிலையம் இவை எல்லாம் அருகில் இருக்கும்படியாக பார்த்துக் கொள்ளுங்கள். ஒயின் ஷாப் அருகில் அமைந்திருக்கும் விடுதியைத் தவிர்ப்பது நல்லது.

‎செக்யூரிட்டி‬ இருக்கிறார்களா என்று பாருங்கள்.

‎குறுகலான‬ சந்து போன்ற இடங்களில் அமைந்திருந்தால் நிச்சயம் ஆபத்தான விடுதி என்று புரிந்துகொள்ளுங்கள்.

இரவு‬ 10 மணிக்குமேல் எந்த ஒரு ஆணும் கேட்டுக்குள் நுழையாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். அவர் ஹாஸ்டல் ஓனராக இருந்தாலும்கூட.

‎இன்‬ டைம் அவுட் டைம் ஒவ்வொருவரும் கட்டாயம் எழுதவேண்டும் என்ற முறை உள்ளதா? என்பதை பாருங்கள். அதற்கான தனி பதிவேட்டினை வைத்திருப்பது நல்லது.

‎இது‬ எல்லாமே சரியாக இருந்தால் நிச்சயம் விடுதி என்பது உங்களின் இன்னொரு வீடாக இருக்கும்!
வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது . உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!! ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.


0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls