Monday, December 23, 2013

"தஞ்சை தேவா சிறப்பு மீன் கொழம்பு"



நிறைய பேர் இன்று நான் செய்த மீன் கொழம்பின் செய்முறையை பதிவிட கேட்டுக்கொண்டதின் பேரில் இந்த பதிவை இங்கே பதிகிறேன்.

தேவையான பொருள்
மீன்(துண்டு துண்டாக) - 1 கிலோ
நல்லெண்ணெய் - ஒரு கொழம்பு கரண்டி
புளி - ஒரு பெரிய எலுமிச்சை பழம் அளவு(3/4 தண்ணீரில் கரைத்து வைத்து கொள்ளவும்)
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கி)
தக்காளி - 3 (சிறுக நறுக்கி)
பூண்டு - 6 பல்லு
கொழம்பு மிளகாய் தூள் - 5 ஸ்பூன்
மஞ்சத்தூள் - 1/2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
வெந்தியம் - 1/2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
மிளகுத் தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - 3 ஸ்பூன்/ தேவையான அளவு
கருவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லி தழை - கொஞ்சம்

செய்முறை :
அடுப்புல கடாயை வைத்து சூடேறியதும் ஒரு கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு வெந்தியம் உளுத்தம்பருப்பு கருவேப்பிலை போட்டு பொன்னிறம் வரும் வரை தாளிக்கணும்.

பிறகு நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு, இஞ்சிபூண்டு பேஸ்ட் எல்லாத்தையும் போட்டு நல்லா வதக்கணும்.ருசி கூடுவதற்கு கொறஞ்சது 15 நிமிஷமாவது தீய கம்மியா வைச்சு வதக்கணும்.

நல்லா வதங்கியதும் புளிக்கரைசல ஊத்தி கூடவே கொழம்பு மிளகாய் தூள், மஞ்சத்தூள், மிளகுத்தூள், உப்பு எல்லாத்தையும் ஒன்னு பின்னால ஒன்னா போட்டு நல்லா கலக்கி கொதிக்க விடனும்.

முக்கியமா கொழம்ப நல்லா சுண்டகொதிக்க விடனும். அப்பத்தான் திக்கா பதமா ருசியா இருக்கும். நல்லா சுண்டக் கொதித்தவுடன் நறுக்கிய மீன் துண்டுகளை கொழம்புக்குள் மூழ்கும் படி ஒவ்வொன்றாக அமுக்கி மூடி ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து அடுப்பை அணைத்து விடுங்கள்.

குறைந்தது 2 மணி நேரம் மீன் துண்டுகள் குழம்புடன் ஊற வேண்டும் அப்போது தான் மீன் துண்டுகளில் குழம்பு சாறு நன்றாக ஊறும்.

அவ்ளோ தாங்க, நல்ல சுவையான தஞ்சை தேவா சிறப்பு மீன் கொழம்பு தயார்.

(ஆறிய மீன் கொழம்புடன் சூடான சாதத்தை கலந்து பிசைந்து சாப்பிட்டால் ஆக ஆகாக ஆகாககாக.... மறுநாள் சாப்பிட்டால் அதீத ருசியோ ருசி தான் போங்க)
வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது . உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!! ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.


0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls