Tuesday, December 10, 2013

பறிக்கப்பட்ட சுதந்திரம் - கூண்டுக் கிளி

பிரிவின் வலி மனிதனை போல தான் மற்ற ஜீவன்களுக்கும் என்பதை உணர மறுக்கும் சின்னஞ்சிறு வயது...

இந்த கொடுமையை நானும் சிறு வயதில் செய்துள்ளேன். பிறந்து ஓரிரு நாட்களே ஆன இந்த குஞ்சை தாயிடமிருந்து பிரித்து கூண்டுக்குள் அடைத்து வளர்த்ததுண்டு.

அதற்க்கு வாழைப்பழம், கோவப்பழம், சோறு இதனை உணவாக ஊட்டி வளர்த்ததுண்டு. தினம் பள்ளியை விட்டு வந்தவுடன் ஆவலோடு வந்து பார்ப்பேன் பச்சைவண்ண ரோமங்கள் வளர்வதை.

நாளுக்கு நாள் வளர்ந்து ஓரிரு மாதங்களில் முழுமையாக மொத்த ரோமமும் வளர்ந்து முழு பச்சை வண்ணமாகி இறக்கைகள் ஓரளவு வளர்ந்து பாதி பறக்கும் நிலைமைக்கு வந்து விடும்.

அதனை கூண்டில் வைத்து தினமும் வெளியே கொண்டு சென்று ஆற்று மணலில் சுதந்திரமாக விளையாடி மகிழ்ந்ததுண்டு. நாளடைவில் நன்கு பழகிய அந்த கிளி மேலே பறக்கவிட்டாலும் தாமாகவே கூண்டை நோக்கி வந்துவிடும் அளவிற்கு பழகிவிட்டது.

ஒரு நாள் அதே போல் மேல தூக்கி பறக்க விட்டு கூண்டின் மீது பார்வையை வழி மேல் விழி வைத்து பார்த்து கொண்டிருந்துதான் மிச்சம் திரும்பி வரவே இல்லை. ஒரு வாரத்திற்கு மனதில் அந்த பச்சை கிளியை பிரிந்த வலி இருந்தது. நாளடைவில் அந்த வலி காணாமல் போய்விட்டது.

உறவு சொந்தமே இல்லாத அந்த கிளியின் பிரிவை என்னாலே தாங்க முடியவில்லையே அதன் தாய் கிளி எப்படி வேதனையடைந்திருக்கும். இப்போது வேதனையடைகிறேன் என்னுடைய அந்த சிறுவயது கொடூர செயலை நினைத்து.

பறவை என்றாலே அவை சுதந்திரமாக பறக்க வேண்டிய இனம் என்று பிள்ளைகளுக்கு சிறுவயதிலேயே உணர்த்துவோம்.
வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது . உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!! ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.


0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls