Friday, December 20, 2013

சப்பாத்திக்கள்ளி பழம்

எங்க ஊர்ல உள்ள கொங்கன் ஆத்தங்கரை ஓரத்துல நிறைய இருக்கும். பள்ளி முடிந்து சாயங்காலம் நேரத்துல இந்த பழத்த பறிக்க பசங்களோட கெளம்பிடுவோம். நகர வாசிகளுக்கு இது என்னான்னே  தெரிய வாய்ப்பு இல்ல. ஒரு வேலை புத்தகத்தில பார்த்திருப்பாங்க. சரி இந்த பழத்தை பத்தை பார்ப்போம். இந்தச்செடி மற்ற செடிகள்போல் இலையெல்லாம் இருக்காது. இதன் தண்டுகள் நீள்வட்டவடிவில் ஒன்றுடன் ஒன்று இனைந்து எல்லா இடத்திலும் முட்கள் நிறைந்து இருக்கும்.  எளிதில்  தாவரங்களை உண்ணும் விலங்குகளிடமிருந்து  தப்பிக்க யாரும் நெருங்கமுடியாத படி முட்களோடு  பாதுகாப்பாக இருக்கும். தன்னைப் பாதுகாத்துக்கொள்ள தனக்குத்தானே போட்டுக்கிட்ட வேலி தான் இந்த முட்கள் என்றும் சொல்லலாம். இலைகள் செய்ய வேண்டிய உணவுத் தயாரிப்பையும் தண்டுகளே செய்துகொள்கிறது.

இதோட பூ நல்ல அழகாகயிருக்கும். இதன் காய் பச்சை கலராகவும் பழம் ரோஸ்/சிவப்பு கலராக இருக்கும். இதன் சுவை ஆகா அதனை சுவைதவர்களுக்கே புரியும் அவ்வளவு சுவையாக இருக்கும். இந்த  பழங்களை பறித்துச் அப்படியே சாப்பிட முடியாது . முதலில் முள்ளு எதுவும் கையில குத்தாம  பழத்தை பறிக்கணும் .பறித்தவுடன் எல்லாப் பழங்களை போல் உடனே சாப்பிட முடியாது. அந்த பழங்களின் தோலைச் சுற்றிலும் மிக நுண்ணிய முட்கள் இருக்கும் அதை சிமெண்ட்  தரையில் ஓரளவு தேய்த்து நீக்கி அப்பறம் பழத்தை இரண்டாக பிளந்தால் அதன் நடுவில் ரவுண்டாக ஒரு முள் இருக்கும்.அதையும் நீக்கிவிட்டு மிகவும் கவனமாகச் சாப்பிட வேண்டும். மிகவும் சுவையாக இருக்கும். இந்தப்பழத்தை மிகவும் கவனமாகச் சாப்பிடனும் இல்லன்னா முள் தொண்டைல மாட்டி நமக்கு ஆபத்தை உண்டுபண்ணிவிடும். அதனாலே தான் சாப்பிட ஆசை இருந்தும்  இதை யாரும் எளிதில் நெருங்குவதற்கு பயப்படுவார்கள்.

[நமது  இரத்தத்தில் பலவிதமான செல்கள், கனிம, கரிமப்பொருட்கள் கலந்துள்ளன. அந்த வகையில் சப்பாத்திகள்ளி பழம்  உறுப்புகளுக்கு தேவையான  கனிம, கரிமப்பொருட்களோடு  ஊட்டச்சத்தை தருவதுடன் செல்  வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன.]
வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது . உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!! ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.


0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls