Wednesday, January 29, 2014

தமிழ் கையொப்பம் - Change Signature

கையொப்பம்!

தமிழில் கையொப்பம் இடுவது சம்மந்தமாக முகநூலில் பதிவிட்டிருந்தேன். அப்போது பல நண்பர்கள் ஆங்கிலத்தில் உள்ள தங்களுடைய கையொப்பத்தை  மாற்றுவது சம்மந்தமான வழிமுறைகளை பதிவிட  கேட்டுகொண்டதின் பேரில் இந்த பதிவை பதிகிறேன்.

நான் விசாரித்தவரை கையொப்பம் மாற்றுவதற்கு சட்டத்தில் சட்டபூர்வமான எந்த வழிமுறைகளும் இல்லை.

வருமான வரி அட்டை (PANCARD)
#வருமான வரி(PANCARD) அட்டையில் மாற்ற அதற்கான விண்ணப்பம் இணையத்தில் கிடைக்கிறது தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து வருவாய்த்துறை அலுவலகத்தில் சமர்ப்பித்து மாற்றிகொள்ளலாம். அல்லது அதற்கான தரகர்கள் நிறைய உள்ளனர் அவர்களிடம் கூடுதலாக அவர்கள் செய்யும் வேலைக்கான  ஊக்கதொகை கொடுத்து மாற்றிக்கொள்ளலாம். விண்ணப்ப படிவம் இணையத்தில் பெற கீழே உள்ள இணைப்பை(Link) அழுத்தி தரவிறக்கி கொள்ளுங்கள்.

http://incometaxindia.gov.in/Archive/ChangeForm.pdf

வங்கி கணக்கு  புத்தகம்
வங்கிகளில் கையொப்பம் மாற்ற அதற்கான விண்ணப்பம் சம்மந்தப்பட்ட வங்கிகளில் கிடைக்கும் அதனை பூர்த்தி செய்து வங்கி அதிகாரியிடம் கொடுத்து மாற்றி கொள்ளலாம்.

ஓட்டுனர் உரிமம் (DRIVING LICENSE)
ஓட்டுனர் உரிமத்தில் கையொப்பம் மாற்ற வட்டார போக்குவரத்து(RTO) அலுவலகத்திற்கு சென்று  அதற்கான விண்ணப்பதை பெற்று பூர்த்தி செய்து மாற்றிக்கொள்ளலாம்.

ஆவணம் மற்றும் கோப்புகள் (DOCUMENTS)
அதோடு இந்த தேதியிலிருந்து என்னுடைய கையொப்பத்தை மாற்றியுள்ளேன் என்று பத்திரங்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரமளிக்கும் வழக்கறிஞரிடம் (Notary Public Lawyer) உறுதி சான்று பெற்று கொள்வதும் மேலும் சிறந்தது.
மேலும் ஏதாவது ஒரு தினசரி பத்திருக்கையில் கையொப்பம் மாற்றம் செய்ததை பற்றி குறு விளம்பரம் செய்வதும் சால சிறந்தது. ஏனெனில் பழைய நிலப்பத்திரங்கள் இதர கோப்புகள்  தொடர்பான கையொப்பங்களை மாற்ற அவசியம் இல்லை. நீங்கள் அதனை தற்போது விற்கவோ அல்லது வேறு பயன்பாட்டிற்கோ கையொப்பம் தேவைபடும் போது இந்த உறுதி சான்றிதழ் பேருதவியாக இருக்கும்.

(பி.கு கடவுச்சீட்டு (Passport) கையொப்பம் மாற்றுவது கடினம் என்று நினைக்கிறன். ஒரு வேளை புதிய கையொப்பமிட்ட வருமான வரி அட்டை மற்றும் வங்கி கணக்கு அட்டை இதனை சாட்சியாக கொண்டு புதுப்பிக்கலாம் அல்லது புதிதாக தான் எடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.)

தமிழுண்டு தமிழ்மக்க ளுண்டு இன்பத்
தமிழுக்கு நாளும்செய்வோம்நல்ல தொண்டு!
-பாரதிதாசன்

நன்றி!
வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது . உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!! ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.


6 comments:

Unknown said...

நன்றி அண்ணா

Unknown said...

நன்றி அண்ணா

திண்டுக்கல் தனபாலன் said...

விளக்கத்திற்கு நன்றிங்க...

DINAKARAN S said...

அருமையான பதிவு

Arun said...

மிக்க நன்றி...

unknown said...

நற்தகவல்...நன்றி

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls