Friday, September 12, 2014

ஒப்பந்த செவிலியர்களை காலம் கடந்தும் நிரந்தர பணியில் அமர்த்தாது ஏன்?

தாழ்மையான வேண்டுகோள்!!! (Please SHARE this post)

இந்த பதிவின் நோக்கமே உயிரை காக்கும் உன்னதமான பணியில் ஈடுபடும் செவிலியர்களின் நிலையை மாண்புமிகு முதல்வர் அவர்களின் பார்வைக்கு கொண்டு சென்று அவரின் மூலமாக நல்லதொரு தீர்வை எட்டும் என்ற உயர்ந்த நம்பிக்கையில்...

இந்த பதிவை பகிர்வதின் மூலம் அவர்களின் இக்கட்டான சூழ்நிலைகளை அரசாங்கத்திற்கு கொண்டுசேர்ப்பதுடன் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்களின் குடும்பங்கள் காக்கப்படும் என்பதை உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.

சட்ட வல்லுநர்களுக்கும் ஒப்பந்த அடிப்படையில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களால் பயனுறும் ஆயிரமாயிரம் பொதுமக்களுக்கும் தஞ்சைதேவாவின் கேள்விகள்...

ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் பணிபுரியும் பல செவிலியர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துவத்தின் நோக்கம் என்ன?

அரசாங்கத்தில் ஒப்பந்த அடிப்படை செவிலியர்களுக்கு எவ்வளவு சம்பளம் அளிக்கப்பட வேண்டும் ?

அரசாங்கத்தில் ஒப்பந்த அடிப்படை செவிலியர்களை எவ்வளவு காலம் ஒப்பந்த அடிப்படையிலேயே பணிபுரிய வைக்கவேண்டும் ?

அரசாங்கத்தில் ஒப்பந்த அடிப்படை செவிலியர்களை எத்தனை வருடங்களுக்குள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்?

ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் போக்குவரத்து ஊழியர்கள், மின்சார ஊழியர்கள் போன்றவர்களை ஓரிரு ஆண்டுக்குள் நிரந்தரமாக்கும் தமிழ்நாடு அரசு உயிரை காக்கும் உண்ணதமான செயலை செய்யும் ஒப்பந்த ஊழியர்களை நான்கைந்து ஆண்டுகளாக வெறும் எட்டாயிரம் ஒன்பதாயிரம் சம்பளம் கொடுத்து நிரந்தரம் செய்யாமலே வைப்பது எந்தவிதத்தில் நியாயம்?

இரவு பகல் பாராமல் சொந்த ஊரை விட்டு கணவனை பிரிந்து வெகுதூரத்தில் பணியமர்த்தபட்டு அவர்களின் சேவையை மட்டும் வாங்கிகொண்டு பிச்சை போடுவது போல் வெறும் எட்டாயிரம் ஒன்பதாயிரம் பணத்தை தூக்கி போடும் தமிழக அரசுக்கு ஏன் தெரியவில்லை அவர்களின் வாழ்க்கை நிலை ?

கேவலம் ஒரு டாஸ்மாக்கில் வேலை செய்யும் குடியை கெடுக்கும் சாராயத்தை ஊத்திகொடுப்பனுக்கு கூட எட்டாயிரம் முதல் இதர வருமானம் கிடைகிறது ஆனால் உயிரை காக்கும் செவிலியர்களின் நிலை மயிருக்கும் சமமாக நடத்தப்படும் அவலம் இங்கே கண்ணெதிரே நடக்கிறது.

அனைத்திற்கும் சங்கம் வைத்து போராடும் பலருக்கு கிட்டும் அரசாங்க ஆதரவு "நோயாளிகளின் நலன்கருதி" அனைத்து செவிலியர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடாமல் இருந்தும் அதே அரசாங்க ஆதரவு கிட்டாதது ஏன்?

நன்றி
தஞ்சை தேவா
வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது . உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!! ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.


0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls